SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND A DIVINE " MAHALAYA PAKSHA " .. WHICH IS KNOWN AS " PITHRU PAKSHA " TOO .. ONE SHOULD NOT THINK OF SKIPPING IT ON ANY COST .. DURING THE PAKSHA THE SOULS OF THE PITHRUS WILL BE DECEND TO EARTH IN THE FORM OF SPIRITS AND WILL BE PRESENT AROUND TO SEE AND BLESS US PITHRU PAKSHA ARE AROUND 15 DAYS TIME WHEN HINDUS WORSHIP THEIR ANCESTORS AND CARRY OUT SOME RITUALS TO MAKE THEIR SOUL REST IN PEACE AND TOGET THEIR BLESSINGS .. THIS PAKSHA HAS IMMENSE VALUES AND GIVES SATISFACTION TO THE PITHRUS IT'S A RITUAL THAT PROVIDES AN OPPORTUNITY TO REPAY DEBT TO OUR ANCESTORS .. IF THE ANCESTORS HAVE CURSES WE CAN RELIEVE THEM BY OFFERING FOOD TO THE POOR .. IT PURIFIES THE MIND OF UNWANTED DECEIVES AND BRING PROSPERITY AND LONG LIFE TO THE FAMILY .. HENCE NITHYA TARPANA IS HIGHLY RECOMMENDED .. IF POSSIBLE .. IT ENDS ON AMAVASYA THE LAST DAY OF SHRADH PAKSHA .. " OM PITHRU DEVO BAWA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ”முதலாம் புரட்டாதிச் சனியும் ” ..
“ மஹாளயபக்ஷமும் “ கூடிவரும் இந்நன்னாளில் நம் மூதாதையரையும் நினைந்து வழிபடுவோமாக ! அவர்களது ஆசியால் நாம் இழந்த அனைத்து செல்வங்களையும் மீளப்பெறுவோமாக ! 

இன்றிலிருந்து புரட்டாதி அமாவாசை வரை மஹாளயபக்ஷ் காலம் ஆரம்பமாகிறது .. நம்முன்னோர்கள் பூலோகம் வரும் காலமாகும் .. 15 நாட்களுக்கு இதனை கடைபிடிக்கின்றனர் .. இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது 
பக்க்ஷ்ம் என்றால் - 15 நாட்கள் .. 
மஹாளயம் என்றால் - மஹான்களின் இருப்பிடமாகும் 
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது ..
அமாவாசை .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி .. மற்றும் மஹாளயபக்ஷ தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் ..

எனவே அவர்கள் சூட்சுமதேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ருதர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதை இங்கு நேரிடையாகப் பெற்று எம்மை ஆசீர்வதிப்பார்கள் .. அவர்களது ஆசியே அனைத்து தடைகளையும் தகர்த்துவிடும் .. ஆகவே மஹாளய நாட்களிலும் .. மஹாளய அமாவாசையிலும் நீர்க்கடன் தருவதும் .. அன்னதானம் .. முன்னோர் அருள்பெறுவதும் மிக மிக முக்கியமாகும் .. 

பல்வேறு சிறப்புகள்மிக்க “ மஹாளயபக்ஷ காலத்தில் “ நம் முன்னோரை நினைந்து பிதிர்வழிபாடு செய்து .. பிதிர் ஆசி
குரு ஆசி .. தேவ ஆசி பெற்று பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று .. சுபீட்சமான வாழ்வு வாழ்வோமாக ! 
” ஓம் பித்ரு தேவோ பவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment