PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A JOYFUL ONAM FESTIVAL TO ALL OUR MALAYAALA FRIENDS & RELATIVES MAY THIS ONAM BRINGS YOU LONGLASTING HAPPINESS FILLED WITH LOVE & PROSPERITY .. " ONASHAMSAKAL "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
” ஓணப்பண்டிகை ” நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இந்நன்னாளில் தங்களைவரது இல்லங்கள் தோறும் அன்பும் .. அமைதியும் நிலவிடவும் .. மகிழ்ச்சியும் .. செல்வ
மும் பெருகிடவும் எம்மை காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல்மாதமான சிங்கம் மாதத்தில் பருவமழைக்காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இந்நாளிலே கொண்டாடப்படுகிறது .. 

கேரளமக்களால் சாதி .. மதவேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் .. இதைக்கேரளாவின்
“ அறுவடைத்திருநாள் “ என்றும் அழைப்பர் .. மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி - திருவோணம் நட்சத்திரம்வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறுது .. 

பண்டையகாலத்தில் இன்றைய கேரளாவை நல்லமுறையில் ஆண்டுவந்த மஹாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி சுபீட்சமாக வாழ்ந்து வந்தனர் .. அப்போது மஹாபலிமீது தேவர்கள் குறைகூறினர் .. மஹாவிஷ்ணுவின் உதவியை நாடி “ விஸ்வஜித் “ என்ற பெயரில் யாகம் நடத்தினார் மஹாபலி .. 

தேவர்கள் குறையைப் போக்கவும் .. உலகம் நிலைத்திருக்கும்வரை மஹாபலி புகழுடன் விளங்கச் செய்யவும் மஹாவிஷ்ணு மிகச்சிறிய வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார் .. யாகம் நடத்திக்கொண்டிருந்த மஹாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார் .. மஹாபலியும் நிலம் வழங்க தயாரகவும் குள்ள உருவமாக இருந்த மஹாவிஷ்ணு விண்ணுக்கும் .. மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார் .. 

பாதம் - புவியையும் ..
தொடை - பூவர்லோகத்தையும் 
வயிறு - மஹாலோகத்தையும்
மார்பு ஜனலோகத்தையும் 
கழுத்து தபோலோகத்தையும் 
முகம் - மற்ற அனைத்து படைப்புகளையும் அளந்து நிறைவு செய்தது .. 
அனைத்து கிரகங்களும் சந்திரன் .. சூரியன் உட்பட பகவானின் விஸ்வரூபத்தில் அடங்கும் .. 

” குற்றமற்றவனே ! பூவுலகம் முழுவதும் என் ஒருபாதத்தின் கீழும் .. 
மேலுலகம் முழுவதும் மற்றொரு பாதத்தினாலும் அளக்கப்பட்டது ..
மூன்றாவது அடி நிலத்திற்காக நான் என்பாதத்தை எங்குவைப்பது என்று பகவான் கேட்க .. 
மன்னன் மஹாபலி மிகவும் பணிவுடன் தலைவணங்கி குனிந்து மூன்றாவது அடியை வைக்க தன் சிரசினையே அளித்தார் .. பகவான் தன்பாதத்தை சிரசில்வைத்து அழுத்த பாதாளத்துக்கே மஹாபலி அனுப்பப்பட்டதோடு அல்லாமல் அவரது பக்தியைமெச்சி முக்தியையும் கொடுத்தார் உலகாள வாமனனாக வந்த பரந்தாமன் .. 

அப்போது .. தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடத்திற்கு ஒருமுறையேனும் பாதாளத்திலிருந்து நாட்டிற்கு வந்து மக்களைக்கண்டு மகிழ ஒருசந்தர்ப்பம் அளிக்குமாறு மஹாபலிவேண்ட பரந்தாமனும் அப்படியே வரம் அருளினார் .. 

கேரளநாட்டு மக்களை மன்னன் காணவரும்நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை அன்று மஹாபலியை வரவேற்கும்பொருட்டு இப்பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் .. 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment