PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY AND A DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS AND EVIL FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது சிறப்பு .. 
கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் .. நல்லாரோக்கியம் பெற்று தங்களனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக்காத்த காலவேளையே ! 
பிரதோஷவேளையாகும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரை)

தோஷம் என்றால் - குற்றம் 
ப்ர என்றால் - பொறுத்துக்கொள்வது 
பிரதோஷம் என்றால் - குற்றமற்றது ..
இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் குற்றமற்றகாலமே பிரதோஷம் .. இந்நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சிகரமான
வாழ்வு கிடைக்கும் .. 

பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர் .. இந்த அனைவரும் என்பது மானிடர்களை மட்டும் குறிக்கவில்லை .. 
முப்பத்து முக்கோடித்தேவர்கள் .. பிரம்மா .. விஷ்ணு .. ஆகியோரையும் குறிக்கும் ..அந்நேரத்தில் சிவனும் ஷேமநலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .. 

ஆதலால் பிரதோஷநேரத்தில் திருமால் கோவில்களில்
வழிபாடு செய்வதில்லை எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் இந்நேரத்தில் நாமும் ஈசனை பிரார்த்தனை செய்தால் அவரது இதயம் கனிந்து நமக்கு அதிகமான நலன்களையும் வாரிவழங்குவார் என ஜோதிட
நூல்கள் கூறுகின்றன ..

பிரதோஷவேளையில் நந்திதேவர்க்கு அருகம்புல் மாலை சார்த்தி .. நெய்விளக்கேற்றி .. பச்சரிசி .. வெல்லம் கலந்துவைத்து பூஜை செய்கிறார்கள் .. எனவே பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வரரையும் வழிபாடு செய்தல்வேண்டும் .. 

நந்திதேவர்க்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு ..
ருத் என்றால் - துக்கம் 
ரன் என்றால் - ஓட்டுபவன் ..
ருத்ரன் என்றால் - துக்கத்தை விரட்டுபவன் .. 

நான்குவேதங்கள் .. 64 கலைகள் என அனைத்தையும் படித்துமுடித்தவர் நந்தீஸ்வரர் .. சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்திபகவான் என்றே ஐதீகம் கூறுகின்றது .. மெத்தப்படித்திருந்தாலும் 
நந்திபகவான் மிகவும் அடக்கமானவர் .. சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக உள்ளது .. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அமர்ந்திருப்பது போல் தோன்றும் .. 

சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு 
ஊடாக தரிசித்து பரமேஸ்வரரின் அருட்கடாக்ஷ்தையும் நந்தீஸ்வரரின் ஆசியையும் பெறுவோமாக .. 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment