SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH THE TREASURE OF HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று தாங்கள் வேண்டும் நலங்களை எல்லாம் வேண்டியவாறே விரும்பிக்கொடுத்தருளும் முருகப்பெருமானைத் துதித்து 
இக பர சுகங்கள் யாவும் பெற்று நலமுடமுடன் வாழ்வீர்களாக ! 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகள் மூன்று கண்களாகவும் 
இப்பெரிய உலகமே ! கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! 

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரேகாலத்தில் ஒளிவீசுவது போன்ற பேரழகு
வாய்ந்த தெய்வீகவடிவம் கொண்டவன் முருகன் ..
முருகனை வணங்கினால் பலகடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் ஒருங்கே பெறலாம் .. எனவே முருகவழிபாடு மிக்க சிறப்புடையது .. 

முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கைபோன்று ஆறாக அருள்மழைபெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து .. “ குஹமயமாக ! ஸர்வம் குஹமயம் ஜகத் “ என வழிபடவேண்டும் .. 

நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை சரணடைந்தால் அவன் நம்மைக்காப்பான் .. நம்
துன்பத்தை அழிப்பான் ! முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! எனக்கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது !

ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment