PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GURUVE SARANAM,....SWAMIYE SARANAM IYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY AND A DIVINE PRADOSHAM TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL THE EVIL FORCES AND SORROWS .. SINS FROM YOUR LIFE & FULFILL ALL YOUR WISHES TOO .. " OM NAMASHIVAAYA "





எனக்குத் தந்தையாகி
என் பிள்ளைக்கும் தந்தையாகி
நேர் வழி காட்டி நின்ற
சற்குருநாதனே
உன் போல் குரு உண்டோ
நம்பிக்கை நாயகனே
உன்னை நம்பினேன் தூயவனே
ஒரு முறை இடறியறியேன்
உனை ஒரு முறை மறுதலித்தறியேன்
கண்ட நாள் முதலாய் 
கண்ணுக்குள் எமை வைத்துக்
காக்கின்ற சற்குருவே
எண்ணத்தில் தூய்மை
செய்கையில் ஈகை
உள்ளத்தில் தாய்மை
இவை நீ தந்த பரிசு
கன்னத்தில் வழிகின்ற
கண்ணீருன் கதை சொல்லும்
சொர்க்கமோ நரகமோ
இன்பமோ துன்பமோ
துணையென நீ இருந்தால்
துணிவுடன் நானிருப்பேன்



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் மாலைவேளையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷகாலவேளையில் ஆலயம் சென்று சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் துன்பங்கள் .. பாவங்கள் .. தோஷங்கள் யாவும் களையப்பெற்று நிம்மதியான வாழ்வு
மலர்ந்திட எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்தி நம்மை ஈசன் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் .. ( மாலை 4.30 - 6.00 மணிவரை)
பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்று பொருள் .. குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமேயானால் நாம் செய்த சகலபாவங்களும் 
நீங்கும் என்பது ஐதீகம் .. 

சிவனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமானது பிரதோஷமாகும் .. தேய்பிறை .. வளர்பிறை என்ற இருபக்ஷ்ங்களிலும் வரும் அமாவாசை .. பௌர்ணமி இரண்டிற்கும் பிறகுவரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது ..

பிரதோஷகாலங்களில் சிவபெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார் .. எனவே இக்காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச்சிறந்த பலன் அளிக்கும் .. “ சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத்தரும் .. சிவபுராண பாடல்களை பாடியும் .. எம்பெருமானை வழிபடலாம் .. 

மூலவரின் தீபாராதனையை நந்திதேவரின் இருகொம்புகளுக்கு ஊடாக காண்பது சிறந்தபலனைக் கொடுக்கும் .. சிவபெருமான் நந்திதேவரின் இருகொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம் .. இத்தகைய தரிசனம் சகலபாவங்களையும் போக்கும் .. 

சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் போற்றுவோம் !
வாழ்வில் நலம்பல பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment