SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF BHAGAWAN BRIHASPATI .. MAY GOD OF WISDOM ENLIGHTEN THE MIND & RELIEVE YOU FROM ALL THE AILMENTS & NEGATIVE FORCES FROM YOUR LIFE .. " JAI SHREE GURUDEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இன்நன்னாளில் குருபகவானாகிய ப்ரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது அனைத்து தோஷங்களும் நீங்கி .. குருபகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செல்வச்செழிப்பு
மேலோங்கவும் .. மனநிம்மதியான வாழ்வு அமைந்திடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் வ்ருஷ்பத்வஜாய வித்மஹே ! 
க்ருணி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ! ப்ரயதிதேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

குரு ப்ரஹஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும் நவக்கிரகங்களில் ஒருவரும் ஆவார் .. இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார் ..

வியாழக்கிழமைகளில் குருபகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் குருவார விரதமாகும் .. இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள்நிற ஆடை அணிந்து குருவை வணங்குவது சிறப்பு .. நெய்தீபம் ஏறி குருவிற்குரிய வஸ்திரம் .. கொண்டைகடலை தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும் . தன்னை வழிபடுகிறவர்களுக்கு பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மனமகிழ்ச்சி .. செல்வம் .. ஆரோக்கியம் ஆகியவற்றையும் தந்தருளுவார் .. 

“ குருபார்க்கும் இடம் விருத்தி ! இருக்கும் இடம் பாழ் “ என்பார்கள் .. குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .. குருபார்வை நீச்சமடைந்தோர் அவருக்கு சாந்தியும் .. பூஜையும் செய்வது நலம் .. 

” ப்ரஹஸ்பதி த்யானம்தப்த காஞ்சனவாணாபாம் !
சதுர்புஜமன்விதாம் ! தண்டாக்ஷ் ஸூத்ரஹஸ்தம் ச 
கமண்டலுவரான் விதாம் புஷ்பராகமயாபூஷம் 
விசித்ரமகுடோஜ்வலம் ஸ்வர்ணாஸ்வரத மாரூடம் ! 
பீதத்வஜ ஸுஸோபிதாம் ! மேரோ ப்ரதக்ஷிணம் 
ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம் ! அபீஷ்டவரதம் தேவம்
ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம் ! ஸர்வ காமார்த்த ஸித்யர்த்தம்
ப்ரணமாமி குரும் ஸதா “ 

பொருள் .. // ..
உருக்கிய தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டவரே ! நான்கு கரங்கள் உடையவரே ! அந்தக்கரங்களில் தண்டம்
ருத்ராக்ஷ்மாலை .. கமண்டலம் .. வரதமுத்திரை ஆகியவற்றைத் தரித்தவரே ! நமஸ்காரம் !! 
பொன்னாடை அணிந்தவரே ! மஞ்சள் சந்தனம் பூசியவரே!
ஒளிவீசும் விசித்திரமான கிரீடம் அணிந்தவரே ! 
மஞ்சள் வண்ணக்கொடி கட்டப்பட்ட தங்கநிறத்தில் ஜொலிக்கும் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்திருப்பவரே ! மேருமலையை மிக அழகாக வலம்வருபவரே ! வேண்டிய வரங்களைத் தட்டாமல் அளிப்பவரே ! தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே ! ப்ரஹஸ்பதி எனும் குருபகவானே ! நம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி எமை காத்தருள்வீராக !

ஓம் குருவே சரணம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



பாலகனின்  பாதையில் அன்பெனும் பூக்கள்
கண்களை மூடி நடப்பதே சாத்தியம்
குருசுவாமி அவர்  சொல்லொன்றே மந்திரமாய்
பின்பற்றுவதே எம் கடமை
நோய் கொண்டு தாக்கினும் பன்வேல் பாலகனை
மெய்யன்பு கொண்டு தொழுவார்க்கேதும் வரா
காயம் இது பொய்யெனினும் இம் மண்ணுலகில்
நாமெடுத்த பிறப்பறுக்க நாடு அவன்  தாள்
சேமமுடன் சிறப்புற்று வாழ
சீர்மிகு அவன்  பாதம் பற்றி அவன்
நாமமதை உரக்கச் சொல்லி
சுவாமியே சரணம் அய்யப்பா
என்று பாடு  அவன் புகழ்

No comments:

Post a Comment