அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று புரட்டாசி அமாவாசையும் .. மஹாளயபக்ஷ இறுதி நாளுமாகும் .. நமது முன்னோர்களான மூன்றுதலைமுறைக்கும் சேர்த்து தாங்கள் சிரார்த்தம் செய்யும்பொழுது பித்ருதேவதைகளின் பர்பூரண ஆசிகளும் .. சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு துன்பம் அணுகாமல்
தங்களனைவரும் இன்பமாக வாழ அருள்புரிவார்கள் ..
புரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் .. சந்திரனின் தென்பாகமும் சூரியனுக்கு நேர்கோட்டில் நிற்கிறது .. விஞ்ஞான ரீதியாக பித்ருக்கள்லோகம் பூமியை சமீபிக்கும் காலம் கணிக்கப்பட்டு மஹாளயபக்ஷமாக வழங்கப்படுகிறது ..
முன்னோர்கள் இந்த உலகைவிட்டுச்சென்றாலும் .. அடுத்து வேறுபிறவி எடுத்தாலும் நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம்முன்னோர்களுக்கான நன்றியை .. மரியாதையை .. வணக்கத்தை .. கடமையை .. சிரார்த்தம் .. தர்ப்பணம் முதலானவற்றை சடங்காகச் செய்கிறோம் .. பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் நீரும் அர்ப்பணிக்கிறோம் ..
வேறொரு நாட்டில் இருக்கும் நண்பன் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது எப்படி அந்தநாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ருகடன் அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச்சேரும் ..
எந்த ஒருசெல்வத்தை இழந்தாலும் .. வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும் .. அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் ! அவை நம்மை காக்கும் கவசங்களாகும் ..
கடக்கமுடியாத காட்டாற்று வெள்ளத்திலும் .. கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி நமக்கு அமையும் ..
எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும் ..
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் .. நாம் அளிக்கும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம்முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம் .. ஆனால் மஹாளயம் ஆரம்பமாகிய நாள்தொட்டு நம்முன்னோர்களே நம் இல்லம் வந்து நாம் அளிக்கும் தர்ப்பணத்தை நேரடியாக ஏற்றுக்கொள்வார்களாம் ஏழைகளுக்கு கொடுக்கும் அன்னதானமும் அதில் அடங்கும் ..
எவரொருவருக்குத் தாயில்லையோ .. தந்தையில்லையோ .. பங்காளிகள் .. நண்பர்கள் இல்லையோ இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு நான் அளிக்கும் இந்த எள்ளும் .. தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும் .. யாருமே அனாதையல்ல ! என்று ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப்பிரார்த்தனை செய்யச்
சொல்கிறது நமது சாஸ்திரம் .. இதுதான் இந்துமதத்தின் மஹோன்னதம் !
மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தி வாழ்க்கையில் உயர்வீர்களாக !
“ ஓம் பித்ருதேவோ பவ “
No comments:
Post a Comment