SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY NAVARATRI DAY .. MAY GODDESS DURGA SHOWER ALL HER BLESSINGS ON YOU & YOUR FAMILY DURING THIS NAVARATRI & MAY SHE REMOVE ALL THE NEGATIVE & EVIL FORCES FROM YOUR LIFE TOO .. " JAI SHREE DURGA DEVI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இன்றைய நாள் வீரத்தின் அதிபதியான அச்சமே ! அச்சம் கொள்ளும் அன்னை துர்க்காதேவிக்கு உகந்த நாளுமாகும் அன்னையைத் துதித்து தங்களனைவரது அச்சங்கள் யாவும் விலகி .. வாழ்வில் உச்சத்தைத்தொட அன்னை அருள்புரிவாராக .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

புரட்டாசிமாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை நாள்முதல் நவமி நாள்வரை வருகின்ற ஒன்பது நாட்களும் நவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது .. 

தனம்தரும் .. கல்விதரும் .. ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் .. தெய்வ வடிவம் தரும் .. நெஞ்சில் வஞ்சம் இல்லா மனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே ! கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே !! 

அம்பிகையின் அருளைப் பெறுவதற்கு பலவிரதங்கள் அனுஷ்டிக்கப் பெற்றாலும் .. அவற்றுள் நவராத்திரி விரதமே ! மிகவும் சிறப்பானது .. என ஆகம நூல்கள் கூறுகின்றன .. 

முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோகநாயகி தமோகுண சஞ்சாரியான ஸ்ரீதுர்க்கா பரமேஷ்வரியாகும் 

ராஜோகுணசொரூபியான ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும் .. 

சாத்வீககுணசொரூபியான ஸ்ரீசரஸ்வதியாகவும் .. மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் .. அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன .. 

துர்க்கையின் அம்சங்களான ( நவதுர்க்கை ) வனதுர்க்கை சூலினி துர்க்கை .. ஜாதவே தோ துர்க்கை .. ஜ்வாலா துர்க்கை சாந்திதுர்க்கை .. சபரிதுர்க்ககை .. தீபதுர்க்கை .. சூரி துர்க்கை .. லவணதுர்க்கை ஆகியனவும் 

லக்ஷ்மியின் அம்சங்களான ( அஷ்டலக்ஷ்மி) ஆதிலக்ஷ்மி மாகலக்ஷ்மி (மஹாலக்ஷ்மி) தனலக்ஷ்மி .. தானியலக்ஷ்மி
சந்தானலக்ஷ்மி ..வீரலக்ஷ்மி .. விஜயலக்ஷ்மி .. கஜலக்ஷ்மி .. ஆகிய சக்தி எனவும் .. 

சரஸ்வதியின் அம்சங்களாக ( அஷ்டசரஸ்வதி ) வாகீஷ்வரி .. சித்ரேஷ்வரி .. துளஜா .. கீர்த்தீஸ்வரி .. அந்தரிட்ச சரஸ்வதி .. கடகசரஸ்வதி .. நீலசரஸ்வதி .. கினிசரஸ்வதி .. ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன ..

ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள்தான் துணை நிற்கின்றது இந்த திருவருட் சக்திதான் .. 
சித்சக்தி .. பராசக்தி .. ஆதிபராசக்தி .. எனப்படுகின்றது இதில் ஆதிபராசக்தியே துர்க்கையாகும் .. 

இவள் நெருப்பின் அழகு .. ஆவேசப்பார்வை .. வீரத்தின் தெய்வம் .. சிவப்பிரியை ! இச்சாசக்தி 
“ கொற்றவை “ “ காளி “ ..என்றும் குறிப்பிடுவர் .. வீரர்களின் தொடக்கத்திலும் .. முடிவிலும் வெற்றித்தெய்வம் ,துர்க்கையாவாள் ! 

தாயே ! துர்க்கையே ! துயரத்தில் உன்னை நினைத்தால் நீ எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குகிறாய் .. இன்பத்தில் நினைத்தால் உலகனைத்திற்கும் நன்மைதரும் மதியை நல்குகிறாய் .. ஏழ்மையையும் துன்பத்தையும் பயத்தையும் போக்குபவளே ! எல்லோருக்கும் கருணை புரிய .. எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத்தவிர யாருளர் .. ? .. எமை என்றும் காத்தருள்வாயாக !! 

ஜெய ஜெயதுர்க்கா தேவி சரணம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment