PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA DURGA .. MAY SHE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES ON THIS SECOND DAY OF NAVARATRI & MAY YOU BE BLESSED WITH JOY .. LOVE & GOOD FORTUNE .. " JAI MATA DI "








அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அலைமகள் .. மலைமகள் .. கலைமகள் .. என முப்பெருந்தேவியரையும் துதித்து வழிபடும் உலகவாழ் இந்துக்களின் புனித நவராத்திரியின் இரண்டாம் நாளாகிய இன்று துன்பமே மிரண்டுபோகும் ஸ்ரீதுர்க்கை அம்மனைத் துதித்து தங்களனைவரது துக்கங்கள் யாவும் களையப்பெற்று தளராத நெஞ்சமும் .. மனதில் அமைதியும் என்றும் நிலைத்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

மஹாசங்கார ( பேரழிவு ) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தை உருவாக்க விரும்புகின்றான் அப்போது 
“ இச்சை “ என்ற சக்தி தோன்றுகின்றது ..
பின் அதை எவ்வாறு அறிகின்றான் எனும்போது 
“ ஞானசக்தி “ தோன்றுகின்றது .. 
பின் ” கிரியாசக்தியினால் “ உலகைப்படைக்கின்றான் ..
இக்கருத்தே நவராத்திரியில் விளக்கப்படுகின்றது .. அதுவே ! 
இச்சை - விருப்பம் 
ஞானம் - அறிவு 
கிரியா - செய்தல் .. ஆக்கல் .. 

நவராத்திரியில் முதல் மூன்று நாட்களும் 
“ இச்சாசக்தியின் “ தோற்றமான துர்க்கையின் ஆட்சிகாலம் .. இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான் .. 

நடுவில் உள்ள மூன்று நாட்களும் “ ஞானசக்தியின் “ தோற்றமான லக்ஷ்மியின் ஆட்சிகாலம் .. இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு .. கரண .. புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான் .. 

இறுதி மூன்று நாட்களும் “ கிரியாசக்தியின் “ தோற்றமான 
சரஸ்வதியின் ஆட்சிகாலம் .. இதில் இறைவன் முன் அறிந்தாவாறு அருள்வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும் .. 

இன்று மஹிஷாசுரனை வதம் செய்ய ஸ்ரீராஜராஜேஷ்வரியை பூஜிக்கும் நாளாகும் .. பரமசிவன் மஹாவிஷ்ணு .. பிரம்மா இவர்களின் கோபாவேஷத்திலிருந்து வெளிவந்த அற்புதஜோதிமண்டலம் சிவசக்தி முகமாகவும் .. மற்ற இருவர் அன்னையின் அங்கங்களாகவும் வெளிப்பட பராசக்தியாக உருவெடுத்தாள் .. 

சிவபெருமான் சூலத்தையும் .. திருமால் சக்கரத்தையும் ..
தேவேந்திரன் வஜ்ராயுதத்தையும் கொடுக்க .. வில் .. அம்பு .. போன்றவற்றையும் தேவர்களிடமிருந்து பெற்ற அன்னை பராசக்தி ஸ்ரீராஜராஜேஷ்வரியாக மஹிஷாசுரனை அழிக்கப் புறப்பட்டாள் ..

ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும் அன்னை உந்தன் பெருமை சொல்லத்தகுமே ! ஆயுளும் .. யோகமும் .. ஐஸ்வர்யம் யாவும் உன் அன்பினால் கடைக்கண் பொழி அருளே ! ஸ்ரீராஜராஜேஷ்வரித் தாயே !
எமை காத்தருள்வாயே !

ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment