PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA DURGA .. MAY THIS DAY BE THE START OF YOUR GOOD LIFE & GOOD FORTUNE & FILL YOUR HEART WITH LOVE & MIRTH .. " JAI MATA DI "



மனமெனும் கோவிலில் 
உனை அமர்த்தி என் 
கண்ணீர் கொண்டு 
அபிசேகம் செய்தேன்
குவித்த கைகள் குவளை மலர்களாய்
பனித்த கண்களுடன்
அர்ச்சனை செய்தேன்
நம்பிக்கை எனும் 
நல்லொளி கொண்டு
நின் நாமம் சொல்லித்
தீபம் காட்டினேன்
என் உள்ளத்தைக் காணிக்கையாக்கி
சிரத்தையுடன் 
நிவேதனமும் தந்தேன்
உன் திருமுகம் காண
உன் கோவில் நோக்கி 
எம் கால்கள் தேய
தினமும் நடந்தேன்
அருளெனும் பிரசாதம்
கிடைத்தாற் போதும்
உயிர் மனக்கூடு அடைந்துவிடும்
உன் அருளெனும் பிரசாதம் 
கிடைத்தாற் போதும்
துன்பங்கள் யாவும் கரைந்துவிடும்



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோகநாயகி துர்க்காதேவியை நவராத்திரி மூன்றாம் நாளாகிய இன்று பூஜித்து நம்மனதிலுள்ள ஆணவம் .. பேராசை போன்ற அசுரத்தன்மைகளை அகற்றி .. உடல் உறுதியுடனும் .. மனவலிமையுடனும் திகழவும் .. தங்கள் வாழ்வில் என்றும் எதிலும் வெற்றியினையே அடையச் செய்வாளாக ..

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

சிருஷ்டி .. காத்தல் .. சம்ஹாரம் என்ற வரிசைப்படி முதலில் பிரம்மதேவனும் .. அடுத்து விஷ்ணு .. இறுதியில் சிவபெருமான் என்றும் அமைகிறது .. இம்மூன்று கடவுளரின் துணைவியர் முறையே சரஸ்வதி லக்ஷ்மி .. துர்க்கை ஆவார் .. ஆனால் நவராத்திரி வழிபாட்டின்போது வரிசை மாறி துர்க்கை .. லக்ஷ்மி .. சரஸ்வதி எனவரும் .. 

எல்லா உயிர்களிடத்தும் சக்தியாகவும் .. வேட்கையாகவும் .. சாந்திவடிவிலும் .. சிரத்தையாகவும் ..
தாய்மையாகவும் .. கருணையாகவும் உறைகிறாளோ அவளே மஹாசக்தி ! அன்னைக்கு மீண்டும் .. மீண்டும் நமஸ்காரம் .. 

இன்றைய நாளில் மஹிஷாசுரனை வதம்செய்ய அன்னைதேவியாக வராஹியாக .. காட்சிதருகிறாள் .. 
தூம்ரலோசனன் .. சும்பன் .. நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே ! போருக்குக் கிளம்பி வருகிறான் .. அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பலவடிவங்களெடுத்து போரிடுகிறான் மஹிஷாசுரன் .. தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான் .. 

இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள் .. அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலைமீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள்பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்க்கையாக வராஹி வடிவத்தில் காட்சியளிக்கிறாள் .. 

இன்று வராஹியை பூஜிக்கும் இல்லங்களில் தனதான்யம் பெருகும் .. வாழ்வு சிறப்பாக அமையும் .. 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment