பாலுடன் கலந்த நீரைப் பிரிக்கும் அன்னம் போல் 
எம்முடனே கலந்த தீயதை அழித்திட்ட பாலகன்
மாலவன் பதமலர் போற்றினோம்
குருவின் நாவில் வெளிவரும் ஆசியால் எமை
மாதருள் மாணிக்கம ஆக்கிடும் 

இருண்ட மனதினில்
இருள் அகற்றி ஏற்றம் செய்திடும் நாயகன்
அனைவரும் போற்றிடும் வாழ்வினை
அருளோடு எமக்கு அளித்து
எம்மை ஏற்றிடையா காழ்ப்பினைத் தவிர்த்து வாழுதற்கு 
ஏற்புடை மனத்தைத் தந்திட்ட பாலகன்


கூர்ப்பினை அடைந்து மனிதரானோம் 
மனதில் குரங்கினை ஒத்தே நாமிருந்தோம் 
தீயதை அழிக்க வந்த தேவனே
தூய்மையை எமக்கு அளித்திட
தூய குருவின் வழி வர ஆசி நல்கினாய்
 
ஆற்றிடை உருண்டோடும் கல்
அழகிய வடிவினைப் பெறுவதுபோல்
மணி குருசாமியின் அருள் ஊற்றினில் கலந்தோடும் நாம் 
நல்ல மனத்தினை அடைய அருள்புரிந்திட்ட நேயனே

 
பேற்றினில் அரிய பேறு பெற்றோம் 
பெம்மானே மணியான குருவினை நாம் பெற்றோம்  
காற்றினில் கரைந்த அன்புருவாய் 
பன்வேல் தொடங்கி பம்பா வரை
என் மூச்சினில் கலந்து இருப்பவரே நல்ல 
பேற்றினை எமக்கு அளிப்பாயே


No comments:

Post a Comment