PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD FORTUNE & ENLIGHTEN YOUR LIFE WITH LOVE & HAPPINESS " JAI MATA DI ".....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சதுர்த்தித் திதியும் .. நவராத்திரி நான்காம் நாளுமாகிய இன்று ரஜோகுணசொரூபிணியும் .. ஞானசக்தியின் வடிவமான ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் யாவும் பெற்று மகிழ்ச்சிகரமான நல்வாழ்வும் வாழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! 

இப்பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம் .. ஆனால் அன்னை ஜெகதாம்பிகை ஒருவளே நித்தியமானவளாகும் .. அன்னையை தூய்மையான உள்ளத்தோடு தியானித்து துதிசெய்தால் அருட்கடாக்ஷ்த்தை அள்ளி வழங்குவாள் .. அம்பிகையின் அருளைப் பெற அந்த மங்களநாயகியின் அம்சம் கலந்த கன்னியாராசியும் அந்த ராசிக்குரிய மாதமுமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் .. 

ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு .. சூரியன் பகலில் ஒளிதருவான் .. ஆனால் அன்னையோ இருளிலும் ஒளிதருபவள் .. மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்ற ஆதவனால் இயலாது .. ஆனால் தேவியால் இயலும் .. 

மக்கள் மனதிலிருந்து பயம் அகலவேண்டும் .. அவர்களை ஏழ்மை தழுவக்கூடாது .. அவர்களது அறியாமை அகன்று அறிவொளி மிளிரவேண்டும் .. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம் .. செல்வம் .. கல்வி .. ஆகிய மூன்றையும் பகிர்ந்தளிப்பவள் அன்னை .. அவளே ! உலகின் தாயானவள் ! பிள்ளைகளில் பாகுபாடு பார்க்காத தாயுள்ளம் கொண்டவள் .. பிள்ளைகளின் உள்ளத்தில் தீயஎண்ணங்கள் உருவாகலாம் .. ஆனால் தீய எண்ணம் கொண்ட தாயுள்ளம் உலகில் இல்லவே ! இல்லை ! என்று
ஆதிசங்கரர் கூறுகிறார் .. 

வாழ்க்கையின் அடித்தளத்தையே தகர்க்கும் ஏழ்மை .. மக்களை பற்றாமல் பார்த்துக்கொள்பவளும் அன்னையே!

இன்று மஹாலக்ஷ்மியை வைஷ்ணவிதேவியாக வழிபடுவது சிறந்தது .. அம்பிகையின் கைகளில் இருந்து உருவானவள் வைஷ்ணவி .. இவள் விஷ்ணுவின் அம்சம் கருடனை வாகனாமாகக் கொண்டவள் .. வளமான வாழ்வு
தருபவள் .. சகலசௌபாக்கியங்கள் .. செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி .. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும் .. 

விஷ்ணுவின் சக்தியான இவள் நீலநிறமானவள் .. ஆறுகரங்களைக் கொண்டு வலது கரங்களில் ஒன்று வரதமுத்திரையிலிருக்கும் மற்றைய கரங்களில் கதா .. தாமரை சங்கு .. சக்கரம் .. ஏந்தியவாறும் காணப்படும் .. வைஷ்ணவி விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் .. கொடியாகவும் கொண்டிருப்பாள் .. ஐஸ்வர்யங்கள் .. பூமிலாபம் போன்றவற்றை அருளும் வைஷ்ணவித்தேவியைப் போற்றுவோம் ! வாழ்வாங்கு நம்மை வாழவைப்பாளாக! 

ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment