பேதை மனம் அறிந்து வரம் அளிக்கும் பாலனே  
போதை தரும் உனது மந்திரம் சரணம் ஐயனே
மேதையாக எனை உயர்ந்திடும் பன்வேல் பாலனே
வேண்டியதை நான் வேண்டாமலே அளித்திடும் என் குருநாதனே   
பன்வேல் நின்று அனைவருக்கும்  வெற்றி தரும் பாலனே
பவித்ர என் குருசாமியின் சீலனே   
வேதப்பொருளாம் ஓம்காரத்தை உபதேசித்த வேலனின் சோதரனே
வாழ்கையின் தத்துவம் சொல்லும் என் குருநாதனே
வேகமாக வந்து எனக்கு தரிசனம் தா பாலனே  
வேறென்ன வேண்டும் உன் பாதம் அல்லால் எனக்கு பாலனே  
வேண்டியபோதெல்லாம் உனையே துதித்திடுவேன் ஐயனே 



No comments:

Post a Comment