PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE GRACE OF GODDESS LAKSHMI & MAA DURGA BLESS YOU WITH HAPPINESS SUCCESS .. PEACE .. AND ALL THE VIRTUES OF LIFE ON THIS AUSPICIOUS NAVARATRI .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வ ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் வல்லமை பெற்ற அன்னை மஹாலக்ஷ்மியை நவராத்திரி ஐந்தாம் நாளாகிய இன்று துதித்து அனைத்து துன்பங்களும் நீங்கி ஆயுள்விருத்திப் பெற்று .. சகலசௌபாக்கியங்களும் சுபீட்சமிக்க நல்வாழ்வு தங்களனைவருக்கும் அமைந்திட
அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

அன்னை மூன்றுநாட்களுக்கு லக்ஷ்மியாக இருந்து நமக்கு கிரியாசக்தியை அதாவது வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து எம்மை முழுமனிதனாக ஆக்குகிறாள் .. அன்னையை வணங்குவதால் இப்பிரபஞ்சம் முழுவதும் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம் .. 

அசையாப்பொருள் பரம்பொருள் என்றும் .. அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது ..நவம் என்றால் புதியது என்றும் .. ஒன்பது என்றும் பொருள்தரக்கூடிய சொல்லாகும் .. நவராத்திரியை பழமையோடும் .. புதுமை
கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம் .. 

பரப்பிரம்மத்தையே பராசக்தி தன் அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் .. என்பதை உலகைப் படைத்த பிரம்மாவையும் .. காக்கும் விஷ்ணுவையும் .. அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாக இருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்த அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கிறாள் .. 

வாழ்க்கைக்குத்தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாகிய மஹாலக்ஷ்மியை இன்று
“ மஹேஷ்வரியாக “ வழிபடுவது சிறப்பு .. 

அன்னை மஹேஷ்வரி மஹேஷ்வரனின் சக்தியாவாள் ..
சர்வமங்களங்களையும் தருபவள் .. தர்மத்தின் திருவுருவம் .. கடின உழைப்பாளிகளின் உழைப்பின் முழுப்பலனைப் பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும் .. 

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் .. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் .. முக்கண் படைத்தவள் .. ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பவள் ..மான் .. மழு ஏந்தி அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள் .. தூயவெண்ணிறமே பிடித்தவண்ணம் .. வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள் .. இவளை வழிபட்டால் நமது கோபத்தைப் போக்கி .. சாந்தத்தை அளிப்பாள் .. இவளது வாகனம் ரிஷபம் ஆகும் .. அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! துன்பம் நீங்கி இன்பம் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment