கண்ணுக்குள் கசியும் கனலை
ஆனந்தப் புனலாய் மாற்றிய குருசுவாமியே
என்னுக்குள் இருந்த உன்னை
எனக்கே அறிய செய்திட்ட மணிசுவாமியே
முன்னை நான் இட்ட பாவத்தீயில்
என்னை நான் கருக்கியபோது இன்னல் களைந்து என்
அன்னையாய் என்னைக் காத்து நின்ற உன்னை
என்னை நான் கருக்கியபோது இன்னல் களைந்து என்
அன்னையாய் என்னைக் காத்து நின்ற உன்னை
எனக்கு அறிமுகம் செய்திட்ட
குருசுவாமியே!
உன்னைக் கண்ட பின் உலகை
மறந்தேன்
எல்லாம் நீயென உவகை கொண்டேன்
என்னைக் காப்பது நின் கடன் அன்றோ
எல்லாம் நீயென உவகை கொண்டேன்
என்னைக் காப்பது நின் கடன் அன்றோ
என்னை நல வழி நடத்துவது
என் குரு சுவாமியன்றோ!
உள்ளத்தில் உள்ளதை
உரைக்கின்றேன்
உவகையுடன் எனை காத்திடு
பன்வேல் வசிக்கும் பாலனே
பாவத்தை போக்கி எனை காத்திடு
No comments:
Post a Comment