PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS SHAKTHI .. TODAY IS THE 6TH DAY OF NAVARATRI IS DEDICATED TO SKANDAMATA THE GODDESS DURGA & THE MOTHER OF LORD KARTHIKEYA .. THE GODDESS CAN BE SEEN SHOWERING HER MOTHERLY BLESSINGS ON HER SON SKANDAKUMAR .. THE DEVOTEES GETS IMMENSE LOVE & AFFECTION FROM GODDESS WHO WORSHIPS HER IN THIS MANIFESTATION

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அனைத்து உயிர்களிலும் செல்வவளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மித் தேவியைப் பிரார்த்தித்து தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷம் பெற்று தாங்கள் விரும்பும் அனைத்து வரங்களையும் தந்தருள்வாளாக .. 

ஓம் மஹாலக்ஷ்மி ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!

கடும்கோடைக்காலமும் மழைக்காலமும் எமனது இரண்டு கோரைப்பற்கள் .. என ஞானநூல்கள் கூறுகின்றன இந்த இரண்டு காலங்களிலும் பலவிதமான தொற்றுநோய்கள் நம்மைத் தாக்கும் ஆபத்து உண்டு .. இது உடலை பாதிக்கும் .. உடல்கெட்டால் உள்ளமும் பாதிப்பு அடையும் .. இந்த பாதிப்புகளிலிருந்து நம்மைக்காப்பவள் ! அன்னை அம்பிகையே ! 

அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம் .. அகிலத்தில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அம்பிகையே இருக்கிறாள் .. அவள் கருணையால்தான் அனைத்தும் உயிர்வாழ்கின்றன என்ற
தத்துவத்தை விளக்கவே இந்நாளில் சக்திவழிபாடு செய்கிறோம் .. 

நவராத்திரி 6ம் நாளாகிய இன்று அம்பிகையை சண்டிகையாக .. கவுமாரியாக வழிபாடு செய்யவேண்டும் 
முருகனின் அம்சமே கவுமாரி .. சஷ்டித் திதி மாலையில் வருவதால் மேலும் சிறப்பு பெறுகிறது .. மயில்வாகனமும் .. சேவல்கொடியும் உடையவள் .. தேவ சேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள் .
“ ஓங்கார சொரூபமானவள் “ சகலபாவங்களையும் நீக்கிவிடுபவள் .. வீரத்தைத் தருபவள் .. கவுமாரி .. கவுமாரன் என்றால் குமரன் .. குமரன் என்றால் முருகக்கடவுள் .. ஈசனும் உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் .. 

இவருக்கு சஷ்டி .. தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு .. மயில்வாகனத்தில் வருபவள் அஷ்டதிக்கிற்கும் அதிபதி அன்னையே ! கடலில் வயிறுகிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள் .. இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிட்டும் .. இளமையைத் தருபவள் .. 
அன்னையைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக ! ஓம் சக்திஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment