PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " JAI SURYA DEV

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில்
நிறைந்தநாளாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப்பணியைச் செவ்வனே செய்துவரும் சூரியபகவானைத் துதித்து தங்களனைவரது உடல்நலமும்
மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் .. மகிழ்ச்சிகரமான நல்வாழ்வு அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸ்ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியனே ! அவனது ஒளியாலேயே ! உயிரினங்கள் வாழ்கின்றன .. எனவேதான் சூர்யவழிபாடு பழங்காலந்தொட்டே கடைபிடிக்கப்படுகிறது .. 

காலைவேளையில் சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து கிழக்குநோக்கி அமர்ந்து தியானம் செய்தால் புத்துணர்ச்சியும் .. ஆரோக்கியமும் கிட்டுவதுடன் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி கூடும் .. 
கண்ணொளி பிரகாசிக்கும் .. 

சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே ! காலச்சக்கரம் என்றும்
ஏழுகுதிரைகளே வாரத்தின் ஏழுநாட்கள் என்றும் 
சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் 
ரிக்வேதம் கூறுகிறது .. 

கண்நோய்கள் .. இருதயநோய்கள் .. மஞ்சள் காமாலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டோரும் .. ஏழரைசனி ..
ஜென்மசனி ..அஷ்டமசனி .. ஆகியன உள்ளோரும் நவக்கிரஹ தோஷங்கள் உடையோரும் சூரியபகவானை
வழிபட்டால் நன்மை பயக்கும் ... மேலும் ஆதித்யஹ்ருதய
ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது சிறப்பு ..

சூரியபகவான் ஆன்மாவைத்தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை -
“ ஓம் ய ஏஷோந் ரதாட்தித்யே ! ஹிரண்மய புருஷ என்றும் .. 

உடல் ஆரோக்கியத்தை அளிப்பவர் என்பதை - 
“ ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் “ என்றும் ..

இதயசம்பந்தமான நோயை நீக்கியருள்பவர் என்பதை -
“ ஹ்ருத்ரோகம் மமசூர்ய ஹரிமாணம் நாசய ” என்றும் 

மழைபெய்யக் காரணம் என்பதை -
“ யாபி ராதித்ய ஸத்பதி ரஸ்மிபிஸ்தாபி “ என்றும் வேதங்கள் போற்றுகின்றன .. 

பார்வையிழந்த மயூரகவி என்பவர் சூரியனைக்குறித்து நூறுபாடல்கள் இயற்றி பார்வையை மீண்டும் பெற்றார் 
அவர் அருளிய பாடல்களே “ சூரியசதகம் “ என புகழ் பெற்றது .. 

சூரியபகவானைப்போற்றி பகவானின் பூரண அருளையும் நலத்தையும் பெறுவோமாக ! 
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment