SWAMIYE SARANAM IYYAPPAGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS OF OUR PITHRUS ( ANCESTORS ) ON THIS " MAHABHARANI DAY " .. MAHALAYA SHRADDHA PERFORMED IN BHARANI IS EQUIVALENT TO DOING IT AT " GAYA SHETRA " .. IT'S BEST TO OFFER FOOD TO THE POOR ON THIS DAY .. " OM PITHRU DEVO BAWA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மஹாளயபக்ஷ்ம் அனுஷ்டிக்கும் இக்காலவேளையில் வரும் “ மஹாபரணி “ எனும் நக்ஷ்த்திரமாகிய இன்றைய நன்னாளில் பித்ருகாரியங்கள் செய்வதற்கு சிறப்பான நேரமாகும் .. 

இன்று அன்னதானம் செய்வது விசேஷமானது .. அப்படிச்செய்வது தர்ப்பணபலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத்தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .. 

இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது ( இந்தமஹாளயபக்ஷ்த்தில்)
உடனே அவர்களைப் போய்ச்சேரும் என்பது ஐதீகம் .. இந்நாளில் செய்யும் சிரார்த்தம் மற்றும் பித்ருபூஜைகள் ஆகியவற்றின் புண்ணியபலன் நமக்குப் பலபிறவிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் .. 

சிரார்த்தம் செய்பவர் நோயின்றி .. நல்ல சுபாவத்துடன் .. தீர்க்காயுள் உள்ளவராகவும் .. அனைத்து ஐஸ்வர்யங்களுடன் கூடிவாழ்வார் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது .. 

இறந்துப்போனாலும் நம்பித்ருக்கள் இந்த மஹாளயபக்ஷ்த்தில் நம் இல்லம்தேடி வருகிறார்கள் .. இவர்களுக்கு நாம் அன்னமளிக்கவேண்டும் .. அதுவே அன்னதானமுமாகிறது .. அன்னமளித்தும் அவர்களது ஆசிகளையும் பெறுவோமாக ! 
“ ஓம் பித்ரு தேவோ பவ “ 

” மஹாபரணி “ ---
மஹாவியதீபாதம் .. வியாதீபாதம் என்பது 27 யோகங்களுள் ஒன்று .. இந்த யோகம் மஹாளயபக்ஷ்த்தன்று ஏற்படும்போது அது மஹாவியதீபாதம் என்றழைக்கப்படுகிறது .. 

மஹாளயபக்ஷ்த்தில் பரணி நக்ஷ்த்திரம் அபரான்ன காலத்தில் வரும்போது செய்யப்படுவது பரணி சிரார்த்தம்
முதலில் “ அபரான்ன காலம் “ என்றால் என்னவென்று பார்ப்போம் .. 

ஒவ்வொருநாளும் பித்ருகாரியத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது .. ராகுகாலம் .. நல்லநேரம் போல் ..
அதன்படி ஒதுக்கப்பட்ட நேரமே அபரான்ன காலமாகும் ..
சுமார் இரண்டுமணிநேரம் வரும் இது .. ஆனால் மஹாளயகாலத்தில் ஒவ்வொருநாளும் மதியம் ஒன்றரை மணியிலிருந்து மூன்றரை மணிவரை நீடிக்கும் .

இந்த அபரான்ன காலத்தில் பரணி நக்ஷ்த்திரம் வந்தால் அதுவே “ மஹாபரணி தினமாகும் “ .. இது பொதுவாக மஹாளயபக்ஷ்த்தில் சதுர்த்தி திதி .. அல்லது பஞ்சமி திதியில் வரும் .. சிலசமயம் திருதியை திதியிலும் வருவதுண்டு .. ஆகவே சிரார்த்தம் செய்ய எண்ணுவோர் 
திதி குறித்து கவலைகொள்ளவேண்டியதில்லை .. 

பரணிநக்ஷ்த்திரத்திற்கு ஏன் இத்தனை சிறப்பு என்றால் இது பித்ருக்களின் அதிபதியாகிய யமதர்மரால் ஆளப்படுவது .. அதனாலேயே இது சிறப்புப் பெறுகிறது .. 

மஹாபரணி சிரார்த்தம் “ கயாசிரார்த்தத்திற்கு ” ஈடானது 
மிகுந்த புண்ணிய பலன்களைத் தரவல்லது ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனு

No comments:

Post a Comment