காற்றில் கலந்த உன் நாமம் 
ஊற்றிடுதே பெருமின்பம் எம் செவியில்
தினம் தினம் உன் உருவம் மனதில் உவகை கொள்ளுதே
சரஸ்வதியுடன் நீ இருக்க
சங்கரன் மைந்தன் நீ சங்கடங்கள் தீர்பாய்
குரு செய்யும் அர்ச்சனையில்
கும்பமாய் நீ உயர்ந்து நிற்க
வாணி சரஸ்வதி வாகையுடன் அமர்ந்திட்ட
காட்சியை காண்கையிலே
உள்ளம் உவகை கொள்ளுதே
சேற்றில் முளைத்த செந்தாமரையும்
உந்தன் சேவடி அழகைச் சொல்லி நிற்க
சாற்றும் பாக்களெல்லாம் உன் புகழைப் பாடி நிற்க 
மாற்றங்கள் வந்தன வாழ்வில் உன் பேரருளாலே
கூற்றான கூற்றுவனும் உன் ஆணை பணிந்து நிற்க
ஈற்றிங்கு பாவி நானும் உன்னடி சேர்வேனா
பன்வேல் நீ இருந்து பாங்குடனே இருக்க காண
ஆயிரம் கண் வேண்டுமையா என் ஆசையும் தீர்ந்திடுமோ

No comments:

Post a Comment