PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



சதமே நீயென்று 
சிந்தித்திருப்போர்க்கு
தயவாய் உன் திருமலர் முகம் காட்டி
சிதலமாய் உடைந்திட்ட
இதயங்கள் சேர்ந்திட இதழ்க்
கடையில் மிளிரும் குறுநகை காட்டி
பதறிக் கண்ணீர் சொரிகின்ற 
இரு விழிகளுக்கு 
அபயம் என்ற உனதிரு கரமும் காட்டி
நிலையில்லாதோடுகின்ற வாழ்க்கைச் சாகரத்தில்
தணலாய் வீசும் ஓர் காற்று
கடும் குளிராய் வீசும் ஒர் வாடை
இதற்கும் அதற்கும் இடையில் நான் படும்பாட்டைப் போக்க
வரப்பிரசாதமாய் குருசுவாமி வழிகாட்டல் 
முடிவுகள் எல்லாம் உன் கையில் உன்
வாக்கினிலே என் வாழ்க்கை ஐயா உந்தன்
போக்கினிலே நான் விட்டு விட்டேன்
எந்தன் குருவின் சொல் செயல் எல்லாம் நீயன்றோ 
சேவடி பணிந்தேன் கதியெனவே
சேவிக்க அருள் புரிய வேண்டும் அடியவனை


No comments:

Post a Comment