அருளெனும் கொடை தனை
மருவியே உமது சுவாமிமார் எமக்களித்து 
பொருளதில் ஆசை தவிர்த்து 
அனைவரது உளமதில் பக்தி பரவ 
பன்வேல் முதல் பதினெட்டாம்படி வரை 
ஒரு நிலையாய் இருந்து 
உனதடி சேவிக்க  வரமருள வேண்டுமய்யா
வளமிகு வாழ்வை எமக்கருள வேண்டுமையா
குருசுவாமி மூலமாக எங்கள் 
குழந்தைகள் வாழ்வில் குதூகலம் தனையளித்து
குவலயம் தன்னில் மேன்மையுறச் செய்து
பரவச நிலை உன் அருள் முகம் கண்டபின்
பெருகும் கண்ணீர் வெள்ளம்
உருகுமடியார்கள் வினை தீர்க்க வந்த 
மருவு பன்வேல் அமர்ந்த பாலகனே 


No comments:

Post a Comment