PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa...guruve saranam GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE PURNIMA & A BLESSED SATURDAY TOO .. MAY LORD SHANIDEV PROTECT YOU FROM ALL EVIL FORCES & BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE SHANIDEV

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பௌர்ணமித் திதியும் .. புரட்டாசிமாத இறுதிச் சனிக்கிழமையுமாகிய இன்று சனீஸ்வரரைத் துதித்து தங்களனைவரும் கிரகதோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெற்று .. நீண்ட ஆயுளுடன் கூடிய சுபீட்சமான நல்வாழ்வும் அமைந்திட சனிபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

நீலாஞ்ஜன ஸமா பாஸம் !
ரவி புத்ரம் யமாக் ரஜம் 
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி ஸனைச்ரம் !! 

பொருள் - 
மைபோன்று கருமை நிறம்கொண்டவனே ! சூரியனின் மைந்தனே ! எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றோம் !! 

சனிபகவான் பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் என்று சனீஸ்வரபகவானை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணியபலத்திற்கேற்ப நன்மை .. தீமைகளை வழங்குவதில் சனிக்குநிகர் சனியே!

சர்வமுட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி என்று அமரவைத்துவிடுவார் .. அதே நேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார் .. ஏழை .. பணக்காரன் .. படித்தவன் .. படிக்காதவன் .. பதவியில் இருப்பவன் .. பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது .. பலகாரியங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமைபடைத்த .. ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரேகிரகம் சனியாகும் .. 

சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியைவேண்டி காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்கோவில்களில்சனிபகவான் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது .. இறைவனாகிய சிவபெருமானையே ஒருகனம் சனிதோஷம் பிடித்ததால் 
தான் சனிபகவானுக்கு “ ஈஸ்வர பட்டம் “ கிடைத்து 
“ சனீஸ்வரன் “ ஆனார் என கூறுவாருமுளர் .. 

சனிபகவானுக்குரிய தானியம் கறுப்பு எள் .. அதனால் எள்ளைப்பொட்டலமாகக கட்டி மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து நல்லெண்ணை விட்டு எரிக்கவேண்டும் .. எள்ளுச்சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு அதன்பின்னரே உண்ண வேண்டும் .. சனிபகவானுக்கு நீலநிறமுள்ள சங்கபுஷ்பமும் .. வன்னி .. வில்வபத்திரங்களும் விருப்பமானவைகள் .. 

புராணவரலாறு -
“ சாக்கடையில் பதுங்கிய இந்திரன் “ 
ஒருசமயம் தேவேந்திரன் சனிபகவானிடம் சென்று நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன் ! என்னை நீ எப்படி பிடிக்கலாம் ? என்று கேட்டார் .. அதற்கு சனிபகவான் நான் நீதிமான் எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரகபரிபாலனம் செய்துவருகிறேன் .. என் பார்வையிலிருந்து எவரும் தப்பமுடியாது என விளக்கம் சொன்னார் .. அப்படியென்றால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தையாவது சொல்லிவிடு என்று தேவேந்திரன் வேண்டினான் ..

சனீஸ்வரர் அந்தகாலநேரத்தை தெரிவித்தார் .. அந்தநேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார் 
சனிகுறிப்பிட்ட காலநேரம் கடந்தபிறகு வெளியே வந்த தேவேந்திரன் உங்கள் பார்வையிலிருந்து தப்பிவிட்டேன் பார்த்தீர்களா? என்று பெருமையடித்ததாக .. சனீஸ்வரரும் நீங்கள் சிம்மாசனைத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே ! அதுகூட என் பார்வை பீடிப்பினால் தான் என்றார் .. இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறியமுடிகின்றது .. 

இல்லாதோர் .. இயலாதோர் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்புசட்டி வாங்கி கொடுக்கலாம் .. 
சனியின் நட்சத்திரமான பூசம் .. அனுஷம் .. உத்திரட்டாதி வரும் நாட்களில் அன்னதானம் வஸ்திரதானம் செய்வது சிறப்பு .. 

சனிபகவானைப் போற்றுவோம் ! சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவோமாக ! 
” ஓம் சனீஸ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment