கட்டுண்டு
கிடக்கிறோம் பன்வேல் பாலகா
மொட்டொன்று அலர்ந்தது போலுன் திருமுகம் கண்டு
பட்டத்தின் நூலறுந்து கீழே விழுந்தது போல் விழுந்தோம்
சட்டென்று எம்மை நீ காத்து நின்றாய்
விட்டில் பூச்சியைப்போல் நம் வாழ்வு அதில்
ஒட்டிகள் கொள்ளாமல் நாமிருந்தோம்
பட்டும் திருந்தாத ஜென்மங்களாய்
கட்டுக்கடங்காமலே திரிந்தோம்,எங்கும்
கிட்டாத பேரருளை அள்ளி அள்ளி நீ தந்தாய் என்றும்
திகட்டாத அருட்சுவையை நாமுணர்ந்தோம்
இஷ்ட குருவை எமக்கு தந்தாய் எம்
இன்னல்கள் களைந்தே காத்து வந்தாய்

பன்வேல் நீ வசித்து வந்தாய்
பலரை அருளுடன் காத்து வந்தாய்
சாமியே சரணம் என்று சொன்ன எம்மை
குருசுவாமி துணையுடன் காத்து அருள்வாய்
No comments:
Post a Comment