PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS MAA SARASWATI .. MAY SHE SHOWER YOU WITH BRIGHTEST LIFE OF KNOWLEDGE AND WISDOM .. ' JAI MAA SARASWATI '

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கலைமகள் என்றும் கலைவாணி என்றும் நாமகள் என்றும் போற்றப்பெறுகின்ற சரஸ்வதிதேவியைத் துதித்து தங்களனைவரும் அன்னையிடம் கேட்ட வரங்கள் யாவும் கிடைக்கப்பெற்று .. அறியாமை நீங்கி .. அறிவுவளர்ச்சி மேலோங்கி நல்வாழ்வு மலர்ந்திட கலைமகளைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
ப்ரம்ம பத்ன்யை தீமஹி ! 
தந்நோ வாணி ப்ரசோதயாத் !! 

நமக்குள் இருக்கும் அறியாமை .. மிருகத்தனம் .. மந்தபுத்தி ஆகிய மூன்று தீயசக்திகளும் புதுப்புது வடிவெடுத்துவந்து நம்வாழ்வை நரகமாக்கிவிடுகின்றன ..
அத்தகைய மிருகத்தனம் கொண்ட அரக்கனை முப்பெரும்தேவிகளும் அழிக்கும் நாட்களே நவராத்திரி விழாவாகும் .. 

நவராத்திரியில் சரஸ்வதிதேவியும் .. மற்ற இருதேவியர்களும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழுவலிமையும் பெற்று அருள்பாலிக்கின்றனர் .. அந்தவகையிலே சரஸ்வதிதேவியும் தன்கணவரான நான்முகனிடம் பூரண அருளைவேண்டி பிரார்த்திப்பதால் 
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள் .. ஆகவே சரஸ்வதிபூஜை செய்கிறவர்களுக்கு அன்னையின் அருட்கடாக்ஷ்ம் நிறைவாகக் கிடைக்கும் .. 

இன்று அன்னையை ப்ராம்மியாக வழிபடுதல் வேண்டும் 
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் ப்ராம்மி .. மேற்குதிசையின் அதிபதி கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள் .. நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள் .. வாக்கிற்கு அதிபதியாவாள் .. நான்குமுகங்கள் .. நான்கு கரங்கள் .. மஞ்சள்வண்ணமே பிடித்தவண்ணம் .. கமண்டலம் .. அக்ஷ்மாலையைப் பின்னிருகரங்களில் ஏந்தி .. முன்னிருகைகளில் அபயவரதம் காட்டுவாள் .. ருத்ராக்ஷ்மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பாள் .. 

மான்தோல் அணிந்திருப்பவள் ஞானம்தந்து அஞ்ஞானம் நீக்குபவள் .. இவளது காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபித்துவந்தால் மாணவர்களுக்கு ஞாபகமறதிநீங்கிவிடும்
ஞாபகசக்தி அதிகரிக்கும் .. 

காயத்ரி மந்திரம் - 
ஓம் ப்ரஹ்ம்ஹ சக்தியை வித்மஹே ! 
தேவர்ணாயை தீமஹி ! 
தந்நோ ப்ராஹ்மி ப்ரசோதயாத் !! 

அன்னையைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment