அருளாளன் அருகிருக்க அஞ்சுவது எதற்கு
அகமகிழ்வுதரும் அவனிடம் அன்பைப் பெருக்கு!
பொருள் வேண்டி பொழுதை வீணடிப்பதெதற்கு
அருள் ஒன்றே போதுமென​ சூளுரைப்பதற்கு
எளியோர்க்கும் எளிதில் வசப்படும் ஐயப்பனின் அன்புப் பெருக்கு
அது ஒன்றே வாழ்வில் நிலையென்பதே கருத்து
கண்ணீரின் துளிகளிலே காட்சி தரும் பிம்பம்
மண்ணில் காணும் சொர்க்கமது பாலகனின் சொந்தம்
ஒரு போது நினைத்தவர்க்கு நாடிடுமே சொர்க்கம்
பாலகனின்  தர்ப்பாரில் இல்லை என்பது இல்லை
எது வந்த போதும் காத்து நிற்கும் அரணே
கதி எமக்கு பதினெட்டாம் படி என்றும் நிரந்தரமே





No comments:

Post a Comment