குருவடிவழகே
உந்தன்
திருவடி என் நிழலே
மருவும் பன்வேல்
மனதில் பதிந்த குடிலே
திருவடி என் நிழலே
மருவும் பன்வேல்
மனதில் பதிந்த குடிலே
கருவும் உந்தன் நாமம் சொல்ல
உருகும் எந்தன் மனமே
கருத்தில் உன்னை நிறுத்தினோர்க்கு
கவலையில்லை இனியே
பெருகும் கங்கை யமுனை
உந்தன் கால் கட்டை விரலில்
உருகிக் கண்ணீர் மல்கி
நனைக்கும் உந்தன் பதமே
குரு
நிதம் செய்யும் பூஜை
நிழலாக
எமை தொடர
நிதம்
பன்னிரண்டை தாண்டியே
குரு விரல்
அசைவிலே அருள் தருவாயே
உலவும்
புவியதனில்
பரவும் உந்தன் முகம் கண்டு
பரவும் உந்தன் முகம் கண்டு
பரவசமாகி
அனைவரும்
பலவும்
கண்டு உணர்ந்தோம்
பன்வேல்
கண்டு தெளிந்தோம்
உந்தன் அருள் போல் எங்கும் இல்லையே
எங்கள் குரு போல் கண்டதும் இல்லையே
பெருகும் கண்ணீர் துடைக்கும்
இரக்கம் உள்ள குருவின் குருவே
பெருகும் கண்ணீர் துடைக்கும்
இரக்கம் உள்ள குருவின் குருவே
இளகும் மனங் கொண்ட
இறையே பரம்பொருளே
இறைஞ்சி நிற்கும் எம்
குறைகள் களைய வருவீர் உடனே
குரு நீ அரு நீ குருவின் இறை நீ
எனையாள்கின்ற மறை நீ
வருவாய் வரம் தருவாய்
உன் சேவடி பணிந்தோமே பன்வேல் வாழும் பாலகனே
No comments:
Post a Comment