PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swami saranam iyyappa...guruve saranam saranam...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DURGASHTAMI .. MAY MAA DURGA GUIDE YOU AND PROTECT YOU FROM ALL EVIL FORCES & BLESS YOU WITH BEST HEALTH WEALTH & PROSPERITY .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்று மாலையே அஷ்டமித் திதியும் ஆரம்பமாவதால் பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு .. தாங்கள் ஆற்றும் எல்லாச் செயல்களிலும் வெற்றியும் .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் பெற்று வாழ்வில் வெற்றியின் உச்சியைத் தொட அன்னையைப் பிரார்த்திக்க்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

நவராத்திரி எட்டாம் நாளான இன்று அன்னை ரத்னபீஜனை வதம் செய்த நாளுமாகும் .. அன்னையை
“ நரசிம்ஹி “ என்றழைப்பார்கள் .. மனித உடலும் .. சிம்மத்தலையும் உடையவள் .. கூரியநகங்களுடன் .. சங்கு .. சக்கர .. தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள் .. சத்ருக்கள் தொல்லையிலிருந்தும் விடுபட அன்னையின் அருள்வேண்டும் .. 

புராணவரலாறு - 
ரக்தபீஜன் என்று ஒரு அரக்கன் கடுந்தவம் புரிந்து ஒருவரம் பெற்றான் .. அவனது உடம்பிலிருந்து சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் மீண்டும் ஒரு ரக்தபீஜன் தோன்றுவான் என்று அவனும் இவனைப்போன்ற ஆற்றலுடன் இருப்பான் என்று ..

ரக்தபீஜனை அன்னை அழிக்கத்துவங்கி கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் ஒரு ரக்தபீஜன் தோன்றினான் அதனால் உலகமே ரக்தபீஜர்களால் நிறைந்தது .. உடனே தேவி தன்னிடமுள்ள சாமுண்டி என்ற காளியை வாயை அகலமாகத் திறந்து 
ரக்தபீஜனின் உடம்பிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் குடிக்கவேண்டும் என்று ஆணையிட்டாள்
சாமுண்டியும் தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள் .. 

கடைசியில் ரக்தபீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து இறந்துவிடுகிறான் .. இறுதியில் கம்பன் .. திசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி .. 

முப்பெருந்தேவியரை நவராத்திரியில் மனமாரத் தியானித்து நாவாராப்பாடி .. உளமாரப் போற்றி .. வழிபட்டு முறையே வீரத்தையும் .. செல்வத்தையும் .. கல்வியையும் பெற்று உய்வோமாக .. 
“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சக்தி தாயே போற்றி “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment