PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS SARASWATHI .. MAY EVERY GOODNESS TOUCH YOUR SOUL & THE BRIGHTEST LIGHT OF KNOWLEDGE ILLUMINATE YOUR LIFE WITH WISDOM & PEACE .. " JAI MAA SARASWATHI DEVI "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அறியும் திறனுக்கு அரணாய் இருந்து அருள்பாலித்து ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து எமைகாக்கும்சக்தியாய் உலவும் அன்னை சரஸ்வதிதேவியை நவராத்திரி 7ம் நாளாகிய இன்று பூஜித்து தங்களனைவரும் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் .. அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
ப்ரம்மதேவ்யை பத்ன்யை தீமஹி ! 
தந்நோ வாணி ப்ரசோதயாத் !! 

கல்விக்கு அதிபதி சரஸ்வதி ! ” எல்லா கலைகளுக்கும் தலைவி ” .. வித்யா என்றாலே ஆத்மாவை மெய்ஞ்ஞானத்திற்கு இழுத்துச் செல்லும் வழி என்று பொருள் .. சரஸ்வதி என்ற சொல்லை 
ஸாரம் - ஸ்வ - இதி என்று பிரிக்கலாம் .. 
”ஸ்வ ” என்பதற்கு தான் என்னும் சாரத்தைத் தருபவள் என்று பொருள் ..

’ தான் ’ என்ற அவள் முழு ஞானத்தைத் தருபவள் அவள் தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும் .. சரஸ்வதியின் இரு கைகளிலும் வேதப்புத்தகமும் .. ஸ்படிகமணி மாலையும் இருக்கின்றன .. கூடவே வீணையும் இருக்கிறது வெள்ளைத்தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் .. அணிந்துள்ளாள் .. 

கல்விகற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் .. என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் .. வெள்ளை உடையும் குறிக்கின்றன .. சரஸ்வதியின் நான்கு கைகளும் மனிதனுடைய மனம் .. புத்தி .. சித்தம் அகங்காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது .. 

சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்மஞானம்
தன்னடக்கம் .. ஆழ்ந்த கல்வி .. சிந்திக்கும் ஆற்றல் தியானம் ஆகியவை இருந்தால் “ நான் “ என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது .. ஆத்மஞானம் பிறக்கிறது .. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது .. 

அறிவுத்தெய்வமாகிய வாணி காளிதாசனுக்குக் காட்சி தந்ததால் “ சாகுந்தலம் “ என்ற காவியம் பிறந்தது .. கலைமகளின் அருளால் கம்பன் ராமாயணம் எழுதினார் ..
கலாதேவியின் அருளால் பேசவே முடியாத 
குமரகுருபர் “ மதுரைமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்”
பாடினார் .. 

கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ ..? மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ ..? விரிந்த அறிவைத்தருமோ .. ? தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச்செய்யுமோ..? அத்தகைய கல்விதான் நமக்குத்தேவை .. இதன்மூலம் நம்முடைய அறியாமை
நீங்கி .. அறிவு வளர்ச்சி மேலோங்கும் என்பது நம் அனைவருடைய நம்பிக்கை .. 

இன்றைய நாளில் அன்னையை மஹாலக்ஷ்மியாக வழிபட வேண்டும் .. கையில் ஜெபமாலை .. கோடரி .. கதை .. அம்பு .. வால் .. கேடயம் .. சூலம் .. பாசம் .. தண்டாயுதம் .. சக்தி .. ஆயுதம் வஜ்ராயுதம் .. சங்கு சக்ரம் மணி மதுக்கலயம் .. தாமரை கமண்டலம் .. ஆகியவற்றைக்கொண்டிருப்பவள் .. விஷ்ணுபத்னியாவாள் .. சிவந்த தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வர்யங்களையும் தருபவள் 

அன்னையைப்போற்றி மனத்தூய்மை .. சாந்தம் .. மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களையும் பெறுவோமாக 
ஓம் சக்திஓம் ! வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .

No comments:

Post a Comment