PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " GURUVARA PRADOSHAM " & MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & SORROWS FROM YOUR LIFE & SHOWER YOU WITH HAPPINESS .. " OM NAMASHIVAAYA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது துன்பங்கள் யாவும் களைந்து வாழ்வில் இன்பமும் .. நல்லாரோக்கியமும் பெற்றிட எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவிரதங்களுள்
முக்கியமானது .. வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை .. உத்தமர்களின் நல் ஆசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும் .. 

குந்தளம் எனில் முன்னும் .. இருப்பும் .. பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும் .. 

உதாரணமாக குருவாரப் பிரதோஷ பலன்கள் - 
முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும் 
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்விற்கும் 
பின்னுமாக - வருங்காலச் சந்ததிகளுக்கும் நல்ல பலன்களைப் பெற்றுத்தருவதாகும் .. 

பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில் .. இதில் திரள்வது புண்ணிய சக்திகள் மட்டுமல்ல .. இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக்காட்சி அளிப்பதால் ..
நடராஜத்தத்துவமாகிய .. அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே ! என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும் .. 

வியாழக்கிழமையில் கூடும் பிரதோஷம் 
” குருசுதாயப் பிரதோஷமாகப் “ போற்றப்படுகின்றது .. 
யாக்ஞவல்கியர் தம் குருவின் ஆணையாக குருகுல பர்ணாசாலையில் இருந்து தலயாத்திரை பூண்டபோது .. ஒவ்வொரு குருவாரப் பிரதோஷத்திலும் சூரியநாராயணமூர்த்தியே தோன்றி குருசுதாய சக்திகளை அளித்து அரவணைத்திருப்பார் .. தாம் இன்றும் சூரியமண்டலத்தில் பிரதோஷ காலத்தில் யாக்ஞவல்கிய மஹரிஷி சிவபூஜை ஆற்றுகின்றார் .. 

இன்றைய பிரதோஷ நேரத்தில் மாலைச்சூரியனையும் யாக்ஞவல்கிய மஹரிஷியின் நினைவோடு ஆலயத்தில் இருந்தவாறே தரிசித்து சிவபூஜை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது .. பிள்ளைகளிடம் கொண்டுள்ள கருத்துவேறுபாடுகள் அகல .. குருவாரப் பிரதோஷநாளில் ஒன்பது சுற்று முறுக்குகளைப் படைத்துத் தானமாக அளித்து சிவபூஜை ஆற்றிடுக .. 

இறைவழிபாடு குறைகளைக் களைந்து நிறைவினைத் தரும் .. முக்கியமாக புண்ணியநாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பலனைத்தரும் .. காலத்துக்கு அதிக வலிமையுண்டு ..காலத்தில் செய்வதற்கு அதிகபலன்கிட்டும் 

இறைவனை எப்பொழுதும் வழிபடவேண்டும் .. ஆனால் புண்ணியதினங்களில் வழிபட்டால் ஒன்றுக்கு கோடிமடங்கு மிகுதியான உயர்ந்த பலன் விளையும் ..
இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று .. இகம் .. பரம்
வீடு என்ற மும் நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் .. 

சிறப்புப்பெற்ற பிரதோஷகால வழிபாட்டினால் பிரம்மாதிதேவர்களுடைய துன்பங்களைப் போக்கி இன்பம் அளித்த கயிலாயநாதனாம் சிவபரம்பொருளாகிய ஈசனை நாமும் பிரதோஷ காலத்தில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) தரிசித்து வணங்கி வழிபாடு செய்து வாழ்வில் எல்லா நலன்களையும் .. வளங்களையும் பெற்று இன்புற வாழ்ந்து .. பேரின்பப்பேற்றை அடைந்து மீண்டும் பிறவா அமைதி நிலையை அடைவோமாக !! 

“ ஓம் சிவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment