PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



துன்பப் பூக்கள் வாடிப் போக 
இன்ப மொட்டுக்கள் முகிழட்டும் ஐயப்பா
வன்மம் என்பது ஒழிந்து போக
வாஞ்சை பெருகட்டும் ஐயப்பா

ஓம் என்ற பிரணவத்தின்
உட்பொருளாய் நீ இருந்து 
விஜய தசமியன்று 
வினை தீர்க்கும் பொருட்டு 
குருவின் பூஜையிலே
காட்சி தந்தாய் ஐயப்பா

பொய்மை என்பது இல்லாதொழிய
வாய்மை வெல்லட்டும் ஐயப்பா
ஏழ்மை வாடிப்போக
காருண்யம் தழைக்கட்டும் ஐயப்பா

மதங்கள் தோற்றுப்போக
மனிதம் வெல்லட்டும் ஐயப்பா
சந்தேகம் வாய்மூடி நிற்க
நம்பிக்கை பேசட்டும் ஐயப்பா







இச்சை கொண்டு தொழுகிறோம் உன்னை
அச்சம் தவிர்த்து எம் பாவங்கள் களைந்தாய்
அச்சம் எம் முகத்தில் தோன்றும் போது
அனிச்சையாய் உன் கரம் வந்தெம்மைத் தாங்கும்
பச்சை மரங்களிலும் அன்பு கொண்டாய்
பரவசமாய் ஆடி இயற்கையை ரசித்தாய்
மூச்சை நிறுத்தும் வரையில் உன் புகழ் பாடும்
என் கவியை தொடர்ந்து எழுத அருள் புரிவாய்
குருவின் ஆசி  கொண்டு என் கவலை தீர்ப்பாய்
தினம் உன்கண்வீச்சைக் கொடுத்து  கோடி நிம்மதி கொடுப்பாய்
வீசுகின்ற புயலும் தென்றலாகும்
ஆசை ஒன்றே ஒன்று உண்டு
குருவின் அருளால் அது நடக்க வேண்டும்  
அது வருடாவருடம் உன் மண்ணை மிதிக்க வேண்டும்
நிறைவேற நீ அருள் புரிய வேண்டும்

No comments:

Post a Comment