PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM SINS & FULFILL ALL YOUR DESIRES & ILLUMINATE YOUR LIFE WITH LOVE & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. துன்பங்களைப்போக்கி இன்பங்களை நல்கும் பிரதோஷ விரதமுமாகிய இன்று ஈசனைப் பிரார்த்தித்து தங்களனைவரது அனைத்து தோஷங்களும் நீங்கி .. சுபீட்சமான வாழ்வு மலர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷகாலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தபயனை அளிக்கும் .. வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரப் பிரதோஷமாகும் .. சுக்கிரன் சுகமளிக்கும் கடவுள் .. போககாரகன் .. வெள்ளியன்று பிரதோஷ வழிபாடு செய்வதால் வாழ்வில் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் .. 

பிரதோஷம் என்றால் என்ன .. ? .. சிவபெருமான் ஆலகாலவிஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் ..அசுரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பாற்கடலைக்கடைந்தபோது திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பகதரு .. சிந்தாமணி .. கௌலஸ்துபமணி .. முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லக்ஷ்மியைத் திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. 

ஆனால் கூடவே கொடிய ஆலகாலவிஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்ட தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகாலவிஷத்தை உண்டார்
தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதிதேவி தன்கரங்களால் தடுக்க விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்தநேரம்தான் பிரதோஷகாலம் என்று வணங்கப்படுகிறது .. 

இந்நேரத்தில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) சிவாலயங்களில் சிறப்புவழிபாடுகள் நடைபெறுகிறது இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாரதனையை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு ஊடாக கண்டுதரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் .. 

“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷகாலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும் முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாகத் தரிசித்து வழிபடுவது பெரும் புண்ணியமாகும் ..

சிவனைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment