பா எழுதிப் பண்ணமைக்க
ஆவல் கொண்டு எமை
காரணியாக்கி காரணம் நீயாகி
இறப்பில் ஒரு உயிர்ப்பெழுத
இசைவு கொண்டனை
நீ எழுதும் நாடகத்தில் இந்த
ஏழைக்கொரு பாத்திரம்
ஊர்முழுக்க தேடியே
உன்னைச் சரணடைந்தேன்
ஆவல் கொண்டு எமை
காரணியாக்கி காரணம் நீயாகி
இறப்பில் ஒரு உயிர்ப்பெழுத
இசைவு கொண்டனை
நீ எழுதும் நாடகத்தில் இந்த
ஏழைக்கொரு பாத்திரம்
ஊர்முழுக்க தேடியே
உன்னைச் சரணடைந்தேன்
திசை தப்பி இருந்த போது
சரியான திசை காட்ட
குருவினை என் கண் முன்காட்டி
அவர் கை காட்டி வழி நடக்க
புரிந்தவன் நீ
தேர் இழுக்க முனைந்து
தேரடியே எனதிருப்பாக
காவடிகள் ஆடுகின்றேன்
காவல் நீயென
பேர் எதற்கு புகழ் எதற்கு
பார் போற்றும் ஐயனே
தேர் இழுக்க முனைந்து
தேரடியே எனதிருப்பாக
காவடிகள் ஆடுகின்றேன்
காவல் நீயென
பேர் எதற்கு புகழ் எதற்கு
பார் போற்றும் ஐயனே
பன்வேல் பாலகனே
வேருக்கே பெருமை
பூத்தலும் காய்த்தலும்
உன் தயவாக
ஊற்றுக்கள் எல்லாம்
அருள்ச் சுனைகளாக
வேற்றுமைகள் இல்லை
உன் அடியவரிடை
தரிசனம் தந்தாய்
பூத்தலும் காய்த்தலும்
உன் தயவாக
ஊற்றுக்கள் எல்லாம்
அருள்ச் சுனைகளாக
வேற்றுமைகள் இல்லை
உன் அடியவரிடை
தரிசனம் தந்தாய்
மும்பையிலும்
சென்னையிலும்
பல விதமாக
உன்னருள் பெற்றவர்கள்
உனையறிந்து கொள்ள
பல விதமாக
உன்னருள் பெற்றவர்கள்
உனையறிந்து கொள்ள
குருவின்
அர்ச்சனையில்
அருள் பூக்கும் பூக்களாய்
உனதாலயம் சபரி உலகமெங்கும் -மன
இருள் விலக்கி நிற்குதே
மன்னுயிர் காத்து
அருள் பூக்கும் பூக்களாய்
உனதாலயம் சபரி உலகமெங்கும் -மன
இருள் விலக்கி நிற்குதே
மன்னுயிர் காத்து
சுவாமியே சரணம்
ஐயப்பா
No comments:
Post a Comment