PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATHI .. MAY HE ENLIGHTEN YOUR LIFE AND MIND & RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES TOO .. " JAI SHREE BRIHASPATHI "



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று தங்களனைவரும் குருவருளும் .. இறையருளும் பெற்று அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. மகிழ்ச்சிகரமான நல்வாழ்வும் மலர்ந்திட குரு ப்ரஹஸ்பதியைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸஹித ! 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ ! 

பொருள் -
உத்தமனே ! உயர்ந்தவனே ! தத்துவத்தின் நாயகனே ! சித்தனே ! புத்திரருக்கு அதிபதியே ! பொன்மகனே ! நித்தம் பக்தியுடன் நின்பாதம் பணிவோம் ! ப்ரஹஸ்பதியே ! 
போற்றி ! போற்றி ! 

வியாழனுக்கு ‘குரு’ என்றும் .. ‘ப்ரஹஸ்பதி’ என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு .. ப்ரஹஸ்பதி என்றாலே அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும் நவக்கிரகங்களில் தலைசிறந்தவராக குரு கருதப்படுகிறார்
தேவர்களுக்கு தலைவராகவும் .. குருவாகவும் இருப்பவர் பிரம்மாவுக்கும் பிடித்தமானவர் .. மிகச்சிறந்த தபஸ்வியான ஆங்கிரச முனிவருக்கும் ஸ்ரத்தாதேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழபகவான் .. 

புராணவரலாறு - 
“ குருபார்வை கோடிநன்மை “ 
ஒருமுறை ஜோதிடக்கலையின் குருவான ப்ரஹஸ்பதியிடம் தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காகவேண்டி சந்திரன் சென்றான் .. அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்தார் 
சந்திரன் அதனைக் கற்றுத்தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்ற மமதையில் மூழ்கித்திளைத்தான் .. 

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம்தட்டிவைக்க விரும்பிய குருபகவான் பூமியில் அப்போது பிறந்த ஒருசிசுவின் ஜாதகத்தைச் சரியாக கணிக்குமாறு சந்திரனைப்பணித்தார் .. சந்திரனும் அந்தச்சிசுவின் ஜாதகத்தைக் கணித்துவிட்டு அந்தக்குழந்தை ஒருவயது பூர்த்தியாகும் சமயம் பாம்புகடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான் .. 

ப்ரஹஸ்பதி சந்திரனை சிலமாதங்கள் கழித்து வரவழைத்தார் .. அச்சமயம் சந்திரனால் ஜாதகம் குறித்துகொடுக்கப்பட்ட குழந்தைக்கு இன்னும் ஒருசில வினாடிகளே இருந்தன .. 

சந்திரனும் குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடி குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தனர் .. தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது .. குழந்தைக்கும் பாம்புக்கும் இடையே ஒரு அடிதூரமே இடைவெளி இருந்தது .. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்சநேரத்தில் பலிக்கப்போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன் குருவை இறுமார்ந்து நோக்க .. குரு தன் புன்னகைமாறாமல் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தார் .. 

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது .. திடீரெனக் கண்விழித்த குழந்தை இறங்கிவரும் பாம்பை ஏதோ புதுமாதிரியான விளையாட்டுச் சாமான் என்று கருதி மகிழ்ச்சியால் கையையும் .. காலையும் .உதைத்துக்கொண்டு துள்ள .. தொட்டிலும் மேலேயும் கீழேயும்.. பக்கவாட்டிலும் திசைமாறிக் குலுங்க பாம்பின் தலை சங்கிலியின் ஒருவளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக்கொண்டது .. தன் தலையை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச்சுழற்றிக்கொண்டு நெளிய குழந்தை மேலும்துள்ள இப்போ பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக்கொண்டது .. 
குழந்தையும் மேலும் மேலும் துள்ளிவிளையாட எவ்வளவு நேரம்தான் பாம்புதாங்கும் ? ஓரிருவாநாடிகளில் பாம்பு இறந்துவிட்டது .. 

அடுத்த விநாடி குழந்தைதன்னுடைய இரண்டாம் வயதில் அடியெடுத்து வைத்தும்விட்டது .. சந்திரன் தன் ஓலைச்சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக்கணக்கை சரிபார்த்துக்கொண்டிருந்தான் .. தன்கணக்கு சரியாகவே இருந்தது .. பின்னர் குருவைப்பார்த்துக்கேட்டான் ஜாதகத்தில் இப்போது குருபார்வைகூட இல்லையே இது எப்படி நடந்தது ? குழந்தை எப்படிப்பிழைத்தது ? என .. 

புன்னகைமாறாத குரு .. ஜாதகத்தில் குருபார்க்காவிட்டால் தான் என்ன ? இப்போது நேரிலேயே பார்த்துக்கொண்டிருந்தேனே ! அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும் ..? என்றார் .. சந்திரனும் தன்கர்வம் அழிந்து குருவை வணங்கி விடைபெற்றான் .. ஜாதகத்தில் கிரகநிலை எப்படி இருந்தபோதும் கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்தபின்னரே உறுதியாகப் பலன்களை உணரமுடியும் .. குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக்கொண்டே கொடுப்பது அதிகம் 
அதனால்தான் குருபார்வை கோடிநன்மை என்கிறார்கள் ..

குருபகவானைப் போற்றுவோம் ! போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ஓம் குருவே சரணம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment