PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE " RAMAA EKADASHI " TOO .. MAY YOU BE RELIEVED FROM SINS .. DISEASE & OBSTACLES FROM YOUR LIFE & MAY LORD VISHNU SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புதன்கிழமையாகிய இன்று 
“ ஏகாதசி விரதமும் “ கூடிவருவது சிறப்பு .. இன்றைய ஏகாதசியை “ ரமா ஏகாதசி “ என்றழைப்பர் .. 
“ ர “ - என்றால் நெருப்பு ..
“ மா “ - என்றால் தாய் .. அதாவது ஒளிபொருந்திய ஏகாதசி என்று பொருள் .. 

இன்று விஷ்ணு ஆலயம் சென்று நெய்தீபம் ஏற்றி பதினோருமுறை வலம் வந்து வணங்குவது சிறப்பு .. ஒருதாயின் அன்புபோல் பெருமாளின் அருட்கடாக்ஷ்ம் பெருகி தங்கள் வாழ்வில் செல்வம் .. ஆரோக்கியம் .. மனநிம்மதி கிடைக்க விஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவான் விஷ்ணு பரமதயாளர் .. மற்றும் மன்னிக்கும் குணமும் கொண்டவர் .. ஸ்ரத்தையுடனோ அல்லது வேறுவழியின்றி நிர்ப்பந்தத்தினாலோ விஷ்ணுபூஜை அல்லது ஏகாதசி விரதம் கடைபிடித்தால் அவ்வாறு செய்பவருக்கு உத்தமமான பலன்களை அள்ளித்தரும் வள்ளல் .. 

பிராணியோ அல்லது மானிடரோ அவர் செய்யவேண்டியது எல்லாம் சிரத்தையுடன் பக்திபூண்டு விஷ்ணுபூஜை செய்வது மட்டும்தான் .. சோபன் தன் மனைவி சந்திரபாகா செய்த சிரத்தையான ஏகாதசி விரதபலனால் தனது தேவபுரம் நகரத்தை ஸ்திரப்படுத்த முடிந்தது .. சந்திரபாகாவை போன்ற உத்தமமான நற்கர்ம மனைவி அமைவது பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் கிருபாகடாக்ஷ்த்தின் பலனாகும் .. 

புராணவரலாறு - 
“ முசுகுந்தன் “ என்னும் பெயர் கொண்ட அரசன் ஆட்சிபுரிந்துவந்த காலத்தில் இந்திரன் .. வருணன் .. குபேரன் .. விபீஷணன் ஆகியோரிடம் மிகுந்த நட்பு கொண்டு சத்தியவானாகவும் .. பகவான் மஹாவிஷ்ணுவின் அத்யந்த பக்தனாகவும் விளங்கினார் 
அவருடைய ராஜ்யத்தில் எவ்விதமான இடர்பாடுகளும் .. தொந்தரவுகளும் இல்லாமல் பிரஜைகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர் .. 

முசுகுந்தன் மகள் சந்திரபாகாவை ராஜா சந்திரசேனனின் மகனான சோபனுக்கு மணம் செய்துகொடுத்தார் .. என்றுமே முசுகுந்தன் ஏகாதசி விரதத்தை மிகவும் ஸ்ரத்தையுடன் கடைபிடித்து வந்ததுடன் அல்லாமல் ராஜ்யத்தின் அனைத்து பிரஜைகளும் இவ்விரதத்தை மிகவும் நியமநிஷ்டைகளுடன் அனுஷ்டிப்பர் .. 

ஆனால் சோபனால் இதுபோல் கடைபிடிக்க முடியவில்லை .. காரணம் பலவீனமான இருதயம் கொண்டவர் .. மாமனாரின் ராஜ்யத்தில் அனைவரும் ஏகாதசிவிரதம் கடைபிடிக்கவேண்டும் என்ற ஆக்ஞை உள்ளதால் சோபனும் அதன்விளைவு எப்படி இருந்தாலும் எழுதி இருக்கும் விதிப்போல் நடக்கட்டும் என்று விரதமிருந்தார் .. மறுநாள் காலை பசியாலும் தாகத்தாலும் தவித்த சோபனின் உயிரும் பிரிந்தது .. 

ராஜா முசுகுந்தன் சோபனின் உடலை ஜலபிரவாகத்தில் விட்டுவிட்டு தன் மகளிடம் கணவனுடன் உடன்கட்டை 
(சதி) ஏறவேண்டாம் என்றும் பகவான் விஷ்ணுவின் கிருபாகடாக்ஷ்த்தின் மீது நம்பிக்கை வைக்க .. ரமா ஏகாதசியின் மஹிமையால் சோபனின் உடலானது ஜலத்திலிருந்து விடுவிக்கப்பட்டது .. சோபனும் திவ்யதேகமடைந்து பகவான் விஷ்ணுவின் கிருபையால் இருவரும் மந்த்ராசல பர்வதத்தின் மேல் தனம் .. தான்யம் என்று அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறது புராணவரலாறு .. 

அனைவரும் ரமாஏகாதசியாகிய இன்று பகவானைத் தரிசித்து பாபங்கள் நீங்கி புண்ணியத்தை பெறுவீர்களாக .. 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ

No comments:

Post a Comment