அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஞாயிற்றுக்கிழமையும் தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று காலபைரவ வழிபாட்டிற்கு உகந்த நாளுமாகும் .. பைரவரைத் துதித்து தங்களனைவரும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று .. பயம் நீங்கி .. நல்லாரோக்கியமும் வியாபாரத்தில் தனலாபமும் .. முன்னேற்றமும் பெறவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே !
ஸ்வர்ணவாஹனாய தீமஹி !
தந்நோ பைரவ ப்ரசோதயாத் !!
எல்லா சிவாலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய்வாகனத்துடன் பைரவர் காட்சிதருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் .. இரவு அர்த்தஜாமத்தில் பூஜைமுடிவிலும் பைரவருக்கு என்று விசேஷபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று நித்யபூஜாவிதி கூறுகிறது ..
கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே காலபைரவர் வழிபாடாகும் ..பூவுலகம் என்பது காலம் இடம் என்று இருதத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரியமுறையில் வழிபடும்முறையை நம்முன்னோர்கள் வகுத்துள்ளனர் .. அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே காலபைரவர் வழிபாடு
எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவமூர்த்தியாவார் .. தேய்பிறையன்று விளக்கு போடுவது சிறப்பு .. விளக்குபோட ஆரம்பிததிலிருந்து 2வது தேய்பிறை அஷ்டமிக்குள் நிறைய நன்மைகள் ஏற்பட்டிருக்கும் .. அதுவும் வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் .. நமக்கு எதெல்லாம் அத்தியாவசியமோ அது ஒவ்வொன்றாக கிடைத்துக்கொண்டேயிருக்கும் .. இதற்கு நாள் கணக்கெல்லாம் கிடையாது .. ஆனால் கண்டிப்பாக கிடைக்கும் ..
நாம்செய்துகொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி .. நாம் என்ன செய்யவேண்டும் என்பதை உணரவைப்பதற்காக ஆரம்பத்தில் கொஞ்சநாள் சோதனைகள் என்கிற பெயரில் நம்மை சோதிப்பார் .. என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் எந்தத்தடைகள் வந்தாலும் தளராமல் விளக்கை ஏற்றுங்கள் .. நிச்சயம் வந்ததுன்பங்கள் எல்லாமே நம்மைவிட்டு விலக ஆரம்பிக்கும் .. நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும் .. நாம எந்த நிலையில் இப்போ இருந்தாலும் .. முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிப்போம் .. அதற்கு சிலசிக்கல்களும் அதைதீர்க்கும் வழிமுறைகளையும் அவரே கொடுப்பார் .. இதுதான் இந்த வழிபாட்டின் முதல் அறிகுறி ..
பைரவரைப் போற்றுவோம் ! மன அமைதியையும் .. வாழ்வில் தன்னம்பிக்கையையும் பெறுவோமாக !
ஓம் ஸ்ரீகாலபைராவாய நமஹ !! வாழ்க வளமுடனும் ..
என்றும் நலமுடனும் ..
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே !
ஸ்வர்ணவாஹனாய தீமஹி !
தந்நோ பைரவ ப்ரசோதயாத் !!
எல்லா சிவாலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய்வாகனத்துடன் பைரவர் காட்சிதருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் .. இரவு அர்த்தஜாமத்தில் பூஜைமுடிவிலும் பைரவருக்கு என்று விசேஷபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று நித்யபூஜாவிதி கூறுகிறது ..
கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே காலபைரவர் வழிபாடாகும் ..பூவுலகம் என்பது காலம் இடம் என்று இருதத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரியமுறையில் வழிபடும்முறையை நம்முன்னோர்கள் வகுத்துள்ளனர் .. அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே காலபைரவர் வழிபாடு
எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவமூர்த்தியாவார் .. தேய்பிறையன்று விளக்கு போடுவது சிறப்பு .. விளக்குபோட ஆரம்பிததிலிருந்து 2வது தேய்பிறை அஷ்டமிக்குள் நிறைய நன்மைகள் ஏற்பட்டிருக்கும் .. அதுவும் வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் .. நமக்கு எதெல்லாம் அத்தியாவசியமோ அது ஒவ்வொன்றாக கிடைத்துக்கொண்டேயிருக்கும்
நாம்செய்துகொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி .. நாம் என்ன செய்யவேண்டும் என்பதை உணரவைப்பதற்காக ஆரம்பத்தில் கொஞ்சநாள் சோதனைகள் என்கிற பெயரில் நம்மை சோதிப்பார் .. என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் எந்தத்தடைகள் வந்தாலும் தளராமல் விளக்கை ஏற்றுங்கள் .. நிச்சயம் வந்ததுன்பங்கள் எல்லாமே நம்மைவிட்டு விலக ஆரம்பிக்கும் .. நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும் .. நாம எந்த நிலையில் இப்போ இருந்தாலும் .. முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிப்போம் .. அதற்கு சிலசிக்கல்களும் அதைதீர்க்கும் வழிமுறைகளையும் அவரே கொடுப்பார் .. இதுதான் இந்த வழிபாட்டின் முதல் அறிகுறி ..
பைரவரைப் போற்றுவோம் ! மன அமைதியையும் .. வாழ்வில் தன்னம்பிக்கையையும் பெறுவோமாக !
ஓம் ஸ்ரீகாலபைராவாய நமஹ !! வாழ்க வளமுடனும் ..
என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment