பச்சை பூ ஆடை அணிந்தார்
பாலகர்  பசுமையோடு இருந்தார்
இச்சையெல்லாம் தவிர்ப்பார்
பாலகர் இன்னல் களைந்திடுவார்
வில்லும் அம்பும்  ஏந்தியே பாலகர் எம்
பிழை பொறுக்க வந்தார் பாலகர்
உம் அருளை மட்டும்நாடி வந்தோம்
மோகினி அவதாரம் எடுத்த
கண்ணனின் சாயலோ பாலகர்
எச்சமயத்தவரும் வணங்கும்
இஷ்ட தெய்வம் பாலகர்
அச்சமில்லை எமக்கே
உந்தன் தாள் பணிந்தோம் சரணம் ஐயப்பா 










நிதம் குரு அர்ச்னையிலே நீ உயர்ந்து நின்று
நீக்கமற நிறைந்து நின்று
நிவேதனம் செய்த பழத்தின் ருசி பார்த்து
நிசர்தனமாய் காட்சி தந்து உய்வளிகிராய்
கதியெமக்கில்லை என துயருற்ற உள்ளம் 

மதி ஒளியென உன் முகம் தினம் காண
 
விதிதனை நொந்த மனம் ஆறுதலடைய-பன்வேல்  
 
பதி வாழ்கின்ற அய்யனே சரணம்

AKILANDA KODI PIRUMANDA NAYAGAN...POOJA AT RAJEEV SWAMY RESIDENCE.....


























கரும்புபோல் இனிக்கிறது உந்தன் அழகு சிரிப்பு
கணக்கிட முடியாத அளவு உந்தன் அலங்காரம்  களிப்பு
கருணை கடல் அலையில் மிதக்கும் மனது திளைப்பு
கணக்கில்லா கலை நயம் குரு கைகளில் அர்பணிப்பு
கணப்பொழுதில் குரு உன்னை அலங்கரிக்கும் நயம் சிறப்பு   
கண நேரம் உன்னை காணாவிடில் என் தவிப்பு 
கதவு திறப்பதுபோல் என் மனக்கதவு திறப்பு 
கண் இமைக்காமல் உனையே பார்க்க விழிப்பு 
கண்டு கொண்டதில் உனை ஆனந்தத்தில் திளைப்பு 
கடமையில் எனை ஈடுபட செய்யும் உன் நினைப்பு 
களிப்போடு பெற்றேன் குருவின் ஆசிகளோடு அணைப்பு 
கன்னம் குழிய உந்தன் திருமுகத்தின் சிரிப்பு 
கலைகளில் சிறந்த கலை ஞானி என் குருவின் சிறப்பு
திறம்பட செய்யும் அலங்காரம் அனைவுர்க்கும் வியப்பு 
களம் பல கண்ட வீரனைப் போல் என் சிலிர்ப்பு  
கரம் குவித்து சிரம் தாழ்த்தி என் நன்றியை தெரிவிப்பு