கரும்புபோல் இனிக்கிறது உந்தன் அழகு
சிரிப்பு
கணக்கிட முடியாத அளவு உந்தன் அலங்காரம் களிப்பு
கருணை கடல் அலையில் மிதக்கும் மனது திளைப்பு
கணக்கிட முடியாத அளவு உந்தன் அலங்காரம் களிப்பு
கருணை கடல் அலையில் மிதக்கும் மனது திளைப்பு
கணக்கில்லா கலை நயம் குரு கைகளில்
அர்பணிப்பு
கணப்பொழுதில் குரு உன்னை அலங்கரிக்கும்
நயம் சிறப்பு
கண நேரம் உன்னை காணாவிடில் என் தவிப்பு
கதவு திறப்பதுபோல் என் மனக்கதவு திறப்பு
கண் இமைக்காமல் உனையே பார்க்க விழிப்பு
கண்டு கொண்டதில் உனை ஆனந்தத்தில் திளைப்பு
கடமையில் எனை ஈடுபட செய்யும் உன் நினைப்பு
களிப்போடு பெற்றேன் குருவின் ஆசிகளோடு அணைப்பு
கன்னம் குழிய உந்தன் திருமுகத்தின் சிரிப்பு
கலைகளில் சிறந்த கலை ஞானி என் குருவின் சிறப்பு

திறம்பட செய்யும் அலங்காரம் அனைவுர்க்கும் வியப்பு
களம் பல கண்ட வீரனைப் போல் என் சிலிர்ப்பு
கரம் குவித்து சிரம் தாழ்த்தி என் நன்றியை தெரிவிப்பு
கரம் குவித்து சிரம் தாழ்த்தி என் நன்றியை தெரிவிப்பு
No comments:
Post a Comment