மணி குருசாமி பூஜையில் மணியான உன்னை காண்கிறேன்
மணியின் ஒலியில் ஓம்கார நாதம் கேட்கிறேன்
மணியை ஒலித்து மணி சாமி உனை அழைப்பதை காண்கிறேன்
மணி பாராமல் நேரம் காலம் தெரியாமல் சரணம் சொல்லி  கூப்பிடுகிறேன்
மணிமணியாக எண்ணங்களை கோர்வையாக அமைக்கிறேன்
மணி மணியான கவிகளை உன் பாதம் சமர்பிக்கிறேன்
மணிமணியாக ரத்தினங்களை மனதினால் அலங்கரிக்கிறேன்
மணியான கழுத்தினில் மரகத மாலை குரு அணிவிக்க கண்டு மகிழ்கிறேன்
அணுஅணுவாக அதை நீ அணிந்துகொண்டதை ரசிக்கிறேன்
அணிஅணியாக உனக்கு பிடித்த நிவேதனங்களை  வைக்கிறேன்
அணிஅணியாக வண்ண பூக்களால் உனை அர்ச்சிக்கிறேன்
குனிந்து குனிந்து உன் பத்ம பாதங்களை பற்றுகிறேன்
பணிந்து பணிந்து உனக்கு கைங்கர்யம் செய்ய துடிக்கிறேன்
பிழிந்து பிழிந்து என் மனத்தை பக்திரசத்தால் பொழிகிறேன்
பொழிந்து பொழிந்து தேனாலும் பாலாலும் உனை குளிர்விக்கிறேன்
நினைத்து நினைத்து உன்னை காணும் நாளை எண்ணுகிறேன்
சரணம் சரணம் என்று சொல்லி உன் பதம் பணிகிறேன் 






 


No comments:

Post a Comment