பாட்டோடு பண்ணும் கேட்டாய்
பதங்களைக் கனவிலே தந்தாய்
வீட்டோடு வந்து இருந்தாய்
விரும்பியதை நீயே பெற்றாய்
முதல் கவிதை அடி நீயே தந்தாய்
முயற்சிக்குத் துணையாய் நின்றாய்
பல கவிதை பாட வைத்தாய்
பண்ணமைக்கக் காரணமானாய்

குருவின் கைகளில் பூக்களாய்
நிறைந்து நின்று வானின் நட்சத்திரமாய்
அருள் பாலிக்கும் பாலகனாய்
பத்மாவதி இல்லத்தில்
உன் அடியவரை ஒன்று சேர்த்தாய்

வேண்டியதை நீ பெற்றாய்
முடிவில்லா உன் புகழை
படி என்று பணித்திட்டாய்
பூஜையின் தொடக்கத்தில்
பூக்களாய் தோரணமாய் நிற்கும்
உன் திருக்கோலம் கண்ட நான் மெய் மறந்து
வாய் திறந்து பாடுகிறேன்
கவிதையாய் பொழிகின்றேன்





No comments:

Post a Comment