PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022


தாளாத சோகத்துடன் 
தாய் வீடு தேடி வந்தேன்
சேய் எனைப் பார் பாலகா
காலாதி காலத்துக்கும் 
கண்ணீரே என் தீர்வா என்
கண்களைப் பார் பாலகா

தாயாகித் தந்தையாகி
அம்மான் ஆகிய பெருமானே
நீயாகிலும் இரங்கவில்லை என்றால்
பூலோகம் இருள்  பாலகா
வெங்காயம் உரிப்பதைப் போல்
என் காயம் ஆற்றிவிடு
உன் காலில் விழுந்த பின்னே
சோகங்கள் ஏன்  பாலகா
ஏக்கங்கள் தீர் பாலகா
ஏகாந்த நிலை ஏன் பாலகா

அன்னை மடி சாய்ந்தது போல்
ஆறுதல் தான் அடைந்தேன்
தேறுதல் தான் பெற்றேன்
அன்னையர்க்கு அன்னையே
சற்குருவே சரணம் ஐயப்பா



No comments:

Post a Comment