PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022


சர்வமும் நீயன்றோ தனித்துவமாய் வந்தாய் போற்றி ஓம்
தத்துவ வடிவோய் போற்றி ஓம்
வித்தக வேந்தா போற்றி ஓம்
விடுதலை அளிப்பாய் போற்றி ஓம்
அற்புத நாதா போற்றி ஓம்
சொற்சுவை ஆனாய் போற்றி ஓம்
பொற்புடைப் பாதம் போற்றி ஓம்
நற்குணம் அளிப்பாய் போற்றி ஓம்
அறநெறி வளர்த்தாய் போற்றி
பிற மதம் காத்தாய் போற்றி ஓம்
துறவறம் இருந்தாய் போற்றி ஓம்
சித்தரின் நிலையே போற்றி ஓம்
சீலங்கள் கொடுப்பாய் போற்றி ஓம்
சிற்றின்பம் தவிர்ப்பாய் போற்றி ஓம்
சிந்தனைக் கடலே போற்றி ஓம்
சீரிய குணத்தாய் போற்றி ஓம்
தத்துவப் பொருளே போற்றி ஓம்
தனித்துவம் ஆனாய் போற்றி
நவரச நாதா போற்றி ஓம்
பவ வினை அழிப்பாய் போற்றி ஓம்
பாவங்கள் களைவாய் போற்றி ஓம்
சுடர் மிகு ஒளியே போற்றி ஓம்
துர்க்குணம் நீக்குவாய் போற்றி ஓம்
விடம் தனை அழிப்பாய் போற்றி ஓம்
இடர் தனை போக்குவாய் போற்றி ஓம்
திசை எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்
விசை என வருவாய் போற்றி ஓம்
மலர் மிசைப் பாதம் போற்றி ஓம்
ஆசைகள் களைவாய் போற்றி ஓம்
ஆபத்தில் வருவாய் போற்றி ஓம்
கோபங்கள் தவிர்ப்பாய் போற்றி ஓம்
கோபுரம் உறைவாய் போற்றி ஓம்
வேசங்கள் விலக்குவாய் போற்றி ஓம்
பன்வேலில்  அமர்ந்தாய்  போற்றி ஓம்
பதினெட்டாம்படி மேல் அமர்ந்தாய் போற்றி ஓம்
ஐம்புலன் அடக்கினாய் போற்றி ஓம்
நோயினைத் தீர்த்தாய் போற்றி ஓம்
சேயினைப் போல் காத்தாய் போற்றி ஓம்
நல்லவை அருளுவாய் போற்றி ஓம்
நல்  குருவினை தந்தாய் போற்றி ஓம்

பஞ்ச பூதங்க்களை அடக்கினாய் போற்றி ஓம்
அஞ்சுகின்றோர்க்கருகில் இருப்பாய் போற்றி ஓம்
குருவின் வழித் தோன்றலே போற்றி ஓம்

அருவுருவம் ஆனாய் போற்றி ஓம்
மருவும் சபரி வாசா  போற்றி ஓம்
உருகும் அடியார் வினை தீர்த்தவா போற்றி ஓம்
எண்ணக் கரு ஆனாய் போற்றி ஓம்
மண்ணில் மங்காப் புகழ் கொண்டவா போற்றி ஓம்
சித்தங்கள் காப்பாய் போற்றி ஓம்
சீரிய  உருவே போற்றி போற்றி ஓம்



No comments:

Post a Comment