தேரோட்டி நீயிருக்க
ஊறு வருமோ எனக்கு
பாராளும் மன்னவன் நீ
பக்கத்துணை இருக்க
ஊறு வருமோ எனக்கு
பாராளும் மன்னவன் நீ
பக்கத்துணை இருக்க
பவித்தரமான குருவும் அருகில் இருக்க
சீராளன் சித்தனவன்
செங்கமல முகம் காக்க
பேரானந்தம் அவன் பெயர்
சொல்லி நிற்கும் வாய்தனை
சொக்கவைக்கும் பாலகன் காக்க
பாவினைப் பாடி நிற்கும்
பைந்தமிழ் நா காக்க
தினம் அவன் புகழ் கேட்கும்
செவி இரண்டும் செவ்வனே காக்க
நல்லதை நுகர்ந்து நிற்கும்
நாசியை நயம்படக் காக்க
கூப்பிய கரங்கள் இரண்டும்
கொற்றவன் காக்கக் காக்க
மலர் அர்ச்சிக்கும் குருவின் விரல்களை
மன்னவன் உவந்து காக்க
வானோடு புகழ் சேர்த்த
வள்ளலவன் கரம் காக்க
கார்குழல் மன்னனவன்
திருப்பாதம் எமைக் காக்க
பன்வேல் அமர்ந்தோன்
பரிதவிக்கும்என் மார்பகம் காக்க
ஆராதனை நிதம் செய்யும் அடியவர்
அறுசுவை உண்டி காக்க
பாதார விந்தம் பணிந்தோம்
பாதங்கள் அவனே காக்க
ஆதாரம் நீயனவே
அண்டி வந்தோம் உம் பதமே
மேலான குருவினை எமக்கு அளித்த உன் புகழ்
மேதினியில் வாழ்க வாழ்க
செங்கமல முகம் காக்க
பேரானந்தம் அவன் பெயர்
சொல்லி நிற்கும் வாய்தனை
சொக்கவைக்கும் பாலகன் காக்க
பாவினைப் பாடி நிற்கும்
பைந்தமிழ் நா காக்க
தினம் அவன் புகழ் கேட்கும்
செவி இரண்டும் செவ்வனே காக்க
நல்லதை நுகர்ந்து நிற்கும்
நாசியை நயம்படக் காக்க
கூப்பிய கரங்கள் இரண்டும்
கொற்றவன் காக்கக் காக்க
மலர் அர்ச்சிக்கும் குருவின் விரல்களை
மன்னவன் உவந்து காக்க
வானோடு புகழ் சேர்த்த
வள்ளலவன் கரம் காக்க
கார்குழல் மன்னனவன்
திருப்பாதம் எமைக் காக்க
பன்வேல் அமர்ந்தோன்
பரிதவிக்கும்என் மார்பகம் காக்க
ஆராதனை நிதம் செய்யும் அடியவர்
அறுசுவை உண்டி காக்க
பாதார விந்தம் பணிந்தோம்
பாதங்கள் அவனே காக்க
ஆதாரம் நீயனவே
அண்டி வந்தோம் உம் பதமே
மேலான குருவினை எமக்கு அளித்த உன் புகழ்
மேதினியில் வாழ்க வாழ்க
No comments:
Post a Comment