கனவொன்று நான் கண்டேன்
கனவெல்லாம் நீயானாய்
எனதென்று ஏதுமில்லை
எனதெல்லாம் நீயானாய்
கனவெல்லாம் நீயானாய்
எனதென்று ஏதுமில்லை
எனதெல்லாம் நீயானாய்
எனது தேகத்தில் உன் ஒளி பட்டு
எனது இருதயத்தில் நீ அமர கண்டேன்
எனது இருதயத்தில் நீ அமர கண்டேன்
உனது கிருபைதனை
உணர்த்தியே நீ சென்றாய்
உணர்த்தியே நீ சென்றாய்
மனதில் நினைத்ததை
நடத்தியே காட்டுகிறாய்
கனவில் வந்து நிதம்
காட்சியும் தருகின்றாய்
நடத்தியே காட்டுகிறாய்
கனவில் வந்து நிதம்
காட்சியும் தருகின்றாய்
கண் முன்னே என்குருவின்
கண் கவர் பூஜைதனை
களிப்புடனே தினம் தந்திட்டாய்
கடுகியே நீ வந்திட்டாய்
என்ன தவம் செய்தேன்
உன் உருவம் தினம் காண
மன்னன் உனைத் தொழவே
மண்ணில் பிறந்து வந்தேன் நான்
உன் உருவம் தினம் காண
மன்னன் உனைத் தொழவே
மண்ணில் பிறந்து வந்தேன் நான்
மகிமை பொருந்திய பாலகா
No comments:
Post a Comment