பனிக்கின்ற கண்களில்
ஜெனிக்கின்ற உருவம் உனதே
நினைக்கின்ற போதிலே
எதிர்படும் முகமும் உனதே
அணைக்கின்ற பாங்கினில்
உதவிடும் கரமுமுனதே
துணிவினைத் தந்து
துயர் துடைக்கின்ற அருளுமுனதே
ஜெனிக்கின்ற உருவம் உனதே
நினைக்கின்ற போதிலே
எதிர்படும் முகமும் உனதே
அணைக்கின்ற பாங்கினில்
உதவிடும் கரமுமுனதே
துணிவினைத் தந்து
துயர் துடைக்கின்ற அருளுமுனதே
மணி குருசுவாமி
கைகளால்
மலர்களில்
உறைந்து மணப்பதும் உனதே
மணி ஒலிக்கின்ற நாதமாய்
செவி வழி இனிக்கின்ற நாமம் உனதே
பணிவை போதிக்கும் குருவினை தனது
அகம் குளிர்கின்ற சினேகம் அனைத்தும் உனதே
பசி வந்திட்ட போதிலே
சுவை தந்திட்ட தாயும் நீயே
பயிர் வளர்ந்திடப் பெய்யும்
அருள் மழையும் நீயே
மணி ஒலிக்கின்ற நாதமாய்
செவி வழி இனிக்கின்ற நாமம் உனதே
பணிவை போதிக்கும் குருவினை தனது
அகம் குளிர்கின்ற சினேகம் அனைத்தும் உனதே
பசி வந்திட்ட போதிலே
சுவை தந்திட்ட தாயும் நீயே
பயிர் வளர்ந்திடப் பெய்யும்
அருள் மழையும் நீயே
தினம் இருவேளை
தரிசனம் தந்து
திகட்டாத
தீந்தமிழமுதம் போல
உடல் கூட்டுக்குள் அகப்பட்ட
துடிக்கின்ற ஜீவனை
மீட்கின்ற திருவும் நீயே
என் பாவங்கள் போக்கியே
எனை ஆளவந்த சற்குருவும் நீயே
உடல் கூட்டுக்குள் அகப்பட்ட
துடிக்கின்ற ஜீவனை
மீட்கின்ற திருவும் நீயே
என் பாவங்கள் போக்கியே
எனை ஆளவந்த சற்குருவும் நீயே
எனது குருவின்
குருவே போற்றி போற்றி
No comments:
Post a Comment