சேவிக்க வேண்டுமய்யா உந்தன்
சேவடி பணிந்து நின்றேன்
யாசித்து நான் நின்றேன் உன்
திருவருள் அருள்வதில் தடையுளதோ

வெள்ளிக்கிழமையிலே விளக்கின் அழகிலே
வெளிச்சம் தரும் அம்பிகையின் மைந்தன்
குருவின் குரு தரும் குறைவில்லா அருளமுதம்
கும்பிட்டு நிற்கிறோம் குறை நீ தீர்பாய்
பகலவன் உதிக்க மறந்தாலும் என்
அகத்தில் இருக்கும் என் ஐயன் 
எனை மறப்பானோ
இகபர சுகம் வேண்டேன்
இனிவரும் பிறவியிலும்
உனை வணங்கும் வரம் கேட்பேன்

வேதமும் தேவையில்லை 
விளக்கமும்  தேவையில்லை
மனமெனும் கோவிலிலே உனை
தினமும் நினைத்தால் போதும்
கணமதில் காட்சி தரும்
பாலகன் சரண் போற்றி

No comments:

Post a Comment