தினம் பாலகன்  நாமம் செபிக்க
மனங்கள் திறந்து கொள்ளும்
நல்லமணங்கள் சுகந்தம் வீசும்
மனிதம் பல்கிப் பெருகும்

உண்மை அன்பு கூடும்
வேற்றுமையது அகலும்
மதங்களின் பிரிவு அகன்று
மனங்களின் ஒற்றுமை கூடும்

அய்யன்  நாமம் சொல்வோம்
அச்சம் பயம் வெல்வோம் 
நோயின் கொடுமை தவிர்ப்போம் 
தாயின் அன்பை உணர்வோம்

சரணம் சரணம் என்று சொல்வோம்
குருவின் ஆசி வெல்வோம் 
ஒற்றுமையில் கட்டுண்டு  
தாயின் அன்பை உணர்வோம்
 


No comments:

Post a Comment