விண் தந்த கொடையே 
மண் போற்றும் வரமே 
என் நெஞ்சில் உள்ளதென்றும் 
உன் உணர்வே
உன்னையே போற்றிக் 
களிப்புடன் வாழ
கண்ணசைவு காட்டிடுவாய் நீயே
குருவின் பூஜையில்
ஆறெழுத்து மந்திரமாய்
சரவணனின் சோதரனை நினைவூட்டி 
நின் அருள் தந்திடுவாய் பாலகா


No comments:

Post a Comment