தீப சுடரினில் வெள்ளிதோறும் உன் திவ்ய ஸ்வரூபத்தை கண்டேன் 
தீபத்தின் வடிவில் அம்பாளை வடிவமைத்த குருவின் மாட்சி கண்டேன்
தீபம் போல் என் வாழ்க்கை பிரகாசிக்க கண்டேன் 
தீமைகள் யாவையும் களைந்து ஆதரவு அளிக்க கண்டேன் 
தீராத பக்தி பசியில் அன்னை  என்னை ஆட்கொள்ள கண்டேன் 
தீவிர நம்பிக்கையை தாயே உன்பால் வைத்திட கண்டேன் 
தீராத வினை எல்லாம் உன்னை கண்ட நொடியில் போக்கிட கண்டேன் 
தீரம் நிறைந்த அன்னைபோல்  நிர்கதியாக நிற்கும் எனை 
தீன தயாபரியாக அணைத்து ரக்ஷிக்க கண்டேன் 
தீப சுடரிலே நீ தரிசனம் தரக் கண்டேன்  
தீப மங்கள ஜ்யோதியாக உனை பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரியே 
 


No comments:

Post a Comment