குருவின் அலங்காரத்தில் பூஜையில்
குறைவின்றி காட்சி தரும் பாலகன் 
சஷ்டி நாளில் வேலவனின் சோதரன் 
வேல் கொண்டு பூஜையில் நிற்கின்ற காட்சி
கைகூப்பி நிற்கின்றேன் மெய் உருகி வாயடைத்து
பாலகனை காண கண் கோடி வேண்டும்
பொய்யடைத்த காற்றுப் பை -இவ்
வையகத்தை விட்டுப் போகும் வரை
செய்யென நீர் இட்ட கட்டளைகள்
செய்து முடிக்கும் வரை
கையளவு இதயத்தில் நீர்
கால் பதிக்க வேண்டுமய்யா
வையகத்தில் நல்ல வாழ்வு வாழவே 
பொய்யகற்றி மெய் நிறுத்தி
உய்ய வழி காட்டுமய்யா
எய்த அம்பாய் எம் 
வல்வினை வாட்டிடவே
உழலுகின்றோம் 
இப் பாரினில் நாமும் -செங்
கழல் பணிந்து 
உளம் வருந்தி
இனியுமொரு பிழை செய்யாமல் 
உம் மாசில்லா திருவுருவை
வாயார வாழ்த்த வேண்டுமய்யா

No comments:

Post a Comment