குறைகள் தீர்க்கும் என்
குருவே
குறிப்புடன் உணர்த்தியதை குறிப்பாய்
உணர்ந்து
குறைதனை தீர்த்தாய் அதனை
பூசைதனில் காட்டினாய்
குற்றம் குறை தீர்த்து
மனதினை பூவாக மாற்றினாய்
கலங்கரை விளக்கத்தின் ஒளி
உமிழ்வது போல்
வளையல்கள் அணிந்த வாணியின் ரூபமாய்
விளக்கின் சுடரிலே வேதனைகள் தீர்த்தாய் நீ
விளங்க முடியா கேள்வியின் உருவம் நீ
ஐயனே உன் பாதாரவிந்தமன்றி வேறு
கதியுமுண்டோ!!
குருசுவாமி அர்ச்சிக்கும் மலர்ந்த பூவின் வாசமும்
குருவின் நிவேதனத்தில் சமர்பித்த கனிந்த பழத்தின் இன்சுவையும் கூட்டி
மெய் சிலிர்கக வைக்கும் பாலகனின் அருளை போற்றும் விருத்தங்கள்
அதனை குருவின் குரலில் பாடி பாடி கேட்டு கேட்டு
பரவசமடைந்தேன்! தொழுதேன் பக்தியுடன்

துன்பப் பூக்களை நித்தம் சுமக்கிறோம்
இன்ப ஊற்றாய் வந்து போகிறாய்
ஊணும் உறங்கமும் அற்றுப் போகுதே
எண்ண அலைகள் உன்னைச் சேருதே
தீராத
துயரமளிக்கும் பாபமூட்டையை
கீழ் இறக்கும் வகை அறியாது தவிக்கும்
எனக்கு இரக்கமுடன் வழி காட்டிடுவாய் !
ஆன்மீக அனுபவத்தை யாசித்தேன்!
கேட்டதை அளிக்கும் பாலகனே
கொடுத்ததை அனுபவிக்க அருள்வாய்!
தேவைகளை அளிக்கும் குருவினை தந்த வள்ளல் நீ!
சித்தம் மகிழ்ந்திட கரும வினை தீர்த்தருள்
சீலம் நிறைந்த சிந்தனையும் நல்லுணர்வையும் நல்கு
லௌகீக பற்றுதலை களைந்து
ஆன்மீக சிந்தனைகளை என்னுள் வளர்த்து
கசப்பினை அகற்றி நீங்காத இனிப்பனை தந்தருள் பாலகா

No comments:
Post a Comment